கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் (Tamils Chamber of Commerce –  CTCC) வருடாந்த நிர்வாக சபை கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் (2018/2019) இன்று காலை 9 மணிக்கு JC’s மண்டபத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாக சபைக்கு சாந்தா பஞ்சலிங்கம் தலைவராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார். 25 வருடத்துக்கு மேலான வரலாற்றை கொண்டிருக்கும் இந்த அமைப்பானது (CTCC) வழமைக்கு மாறாக மிகவும் குறைவான கூட்டத்துடன் நடந்து முடிந்த AGMRead More →

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை பாராட்டி அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அகதி ஒருவரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று கனேடிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஒத்மன் ஹெம்டன் என்ற நபரால் நாட்டின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் எழலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் சபை இந்த முடிவுக்கு வந்துள்ளது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஐ,எஸ் அமைப்புக்கு ஆதரவு கருத்துகளை பதிவிட்டதாக கூறி ஜோர்தானில்Read More →

ஜவாஹர்லால் பல்கலைக்கழக அரசியல் ஆராட்சி மாணவ மன்றம் இலங்கையில் நடைபெறும் பரபரப்பான அரசியல் மாற்றத்தின் மத்தியில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் C.V .விக்னேஸ்வரன் அவர்களின் புதிய கட்சி தொடக்கம் பற்றிய ஈழ தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் ஈழ தமிழர்களினதும் கருத்தை அறிய இந்த கருத்து கணிப்பை Toronto Tamil (www.torontotamil.com) ஊடாக நடத்துகின்றது. இக்கருத்து கணிப்பு Oct 26, 2018 முதல் November 02, 2018 வரை உள்ள 7 நாட்கள்Read More →

தாய்லாந்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதன சுவரில் விசிறல் நிறப்பூச்சால் எழுதியமைக்காக பொலிசாரால் கைது செய்யப்பட்ட கனடாவைச் சேர்ந்த இளம்பெண் தனது செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார். எனினும், அடுத்த கட்ட சட்டநடவடிக்கை குறித்து அச்சமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது நண்பர்களோடு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற கனடா நாட்டைச் சேர்ந்த பிரிட்னி ஷ்னெய்டர் (22) என்பவர், பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு நண்பருடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பும்போது ஒரு விசிறல்Read More →

ஒன்ராறியோவில் மாணவர்கள் அல்லது குழந்தைகள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறிந்தால் ஆசிரியர்களின் கல்வி கற்பிப்பதற்கான உரிமம் உடனடியாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பிலான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ கல்வி அமைச்சர் லிசா தொம்சன் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ கல்லூரி ஆசிரியர்களின் ஒழுங்கு நிலைகளை பேணும் வகையில் கல்வி அமைச்சர் லிசா தொம்சன் பாதுகாப்பான மற்றும் துணைபுரியும் சட்டத்தை தாக்கல் செய்தார். இந்நிலையில் அந்தRead More →

கடந்த ஜூன் மாதம் 9ம் திகதி இடம்பெற்ற ஒரு கொலை தொடர்பான வழக்கில் 28 வயதான சகிலன் சுரேந்திரன் (Sahilan Surendran) என்ற இளைஞரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஒன்றாரியோவில் ஒசாவா பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும், உயிரிழந்தவர் Kyle David Baker என்பவர் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன விற்பனை (car dealership) நிலையமொன்றில் இரு இளைஞர்களுக்கிடையிலான தகராறு இறுதியில் துப்பாக்கிச்சூட்டில் முடிந்துள்ளது. அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சைRead More →

ஒன்ராறியோ மாகாணத்தில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு மாற்றம் இருக்காது என்று ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. கத்தலின் வின் தலைமையிலான முன்னைய லிபரல் அரசாங்கம் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்பை அறிவித்திருந்ததுடன், ஆண்டு தோறும் அது அதிகரித்துச் செல்லும் வகையிலான திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தியிருந்தது. மணித்தியாலத்திற்கு 11.60 டொலர்களாக இருந்த குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை, மணித்தியாலத்திற்கு 14 டொலர்களாக அதிகரித்த லிபரல் அரசாங்கம், எதிர்வரும் ஆண்டு அந்தRead More →

கனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கு முன்னரே புனித ஆல்பர்ட் பகுதியில் விளம்பரம் மற்றும் விற்பனை செய்த நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் கோரி கடந்த சில மாதங்களாக கனடாவின் பல மாகாணங்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இம்மாதம் 17 ஆம் திகதி அது சட்டபூர்வமாக்கப்பட்டது. இதற்க்கு முன்னரே பல இடங்களில் கஞ்சா விற்பனை இடம்பெற்றுRead More →

சவுதி அரேபியாவிற்கு இலகுரக கவச வாகனங்களை விற்பனை செய்யும் 15 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை ரத்துசெய்ய கனடா தீர்மானித்துள்ளது. சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலைசெய்யப்பட்டதன் பின்னணியில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த அறிவிப்பை நேற்று (புதன்கிழமை) விடுத்துள்ளார். நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி ட்ரூடோ, குறித்த ஒப்பந்தம் தொடர்பாக கணிசமான நிதி அபராதங்களை விதிக்கப்போவதாக குறிப்பிட்டிருந்தார். எனினும், கஷோக்கியின் கொலை மிருகத்தனமானதென்றும், அதற்கு தகுந்தRead More →