சென் மைக்கல்ஸ் கல்லூரியின் அதிபர் மற்றும் சபைத் தலைவர் ஆகியோர் பதவி விலகியுள்ளதாக, சென் மைக்கல்ஸ் பாடசாலை நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொடர்பிலான தாக்குதல் மற்றும் பாலியல் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை அடுத்து அவர்கள் இவ்வாறு பதவி விலகியுள்ளனர். பாடசாலை சபைத் தலைவர் அருட்தந்தை ஜெஃபெர்சன் தோம்சன் மற்றும் கல்லூரி அதிபர் கிரெக் றீவ்ஸ் ஆகியோர் உடனடியாக நடப்புக்கு வரும் வகையில் பதவி விலகுவதாகRead More →

இங்கு மாவீரர் தினம் தேவைதானா? – சில கேள்விகளும் பதில்களும்! ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி “போராடிய போராளிகள் தாயகத்தில் வறுமையில் வாடும்போது புலம்பெயர் தேசத்தில் மாபெரும் செலவில் விழா தேவையா?” என்பதே. நல்ல கேள்வி. கேட்க வேண்டிய கேள்விதான். ஆனால் இதற்குரிய பதிலை காண்பதற்கு முன்னர் “ நாம் ஏன் மாவீரர்களை நினைவு கூர வேண்டும்?” என்ற கேள்விக்கு பதில் காண்போம்.; மரணித்தவர்கள்Read More →

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஊடகங்களுக்கு இலஞ்சம் வழங்க முயற்சிப்பதாக, எதிர்க்கட்சியான கொன்சவேற்றிவ் குற்றம் சாட்டியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது சாதகமான ஊடகத் தகவல்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலேயே பிரதமர் ஊடகங்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஊடகத்துறைக்கு உதவும் வகையில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கான வரிச் சலுகைத் திட்டத்தை நிதியமைச்சர் பில் மோர்னியூ அண்மையில் அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமையை தொடர்ந்தே பிரதமர் ட்ரூடோ அரசாங்கத்தின் மீதானRead More →

அரசியலிலிருந்து முழுமையாக விடைபெறுவதாக கனேடிய லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ் கிரெவல் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட மற்றும் மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி அவர் தனது விலகலை அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த அரசியல் விலகல் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிராம்டன் கிழக்கு தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும், தனது விலகல் குறித்து பிரதம கொரடாவிடம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.Read More →

கனடா டொரோண்டோவில் Balachandran Law என்ற சட்ட நிறுவனத்தை நடத்திவந்த;  இளம் தமிழ் வழக்கறிஞர் அகி பாலச்சந்திரன் (Aghi Balachandran) நேற்று மரணமடைந்தார்.  மிக இளம் வயது தமிழ் குற்றவியல் வழக்கறிஞராக இவர் டொரோண்டோவில் தனது சேவையை ஆற்றி வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இவருடைய மறைவையொற்றி பல்வேறு செய்திகள் வந்த நிலையில், அகி பாலச்சந்திரன் அதிகரித்த fentanyl பாவனையால் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக Toronto Sun இன்று செய்தி வெளியிட்டுள்ளது.Read More →

கனடாவில் தேசிய படுகொலை விகிதம் கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத வகையில் கடந்த ஆண்டு கடுமையான அதிகரிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை கும்பல்கள் மற்றும் துப்பாக்கிச்சூடுகளின் அதிகரிப்பே இப்படுகொலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த ஆண்டு மாத்திரம் 660 கொலைக் குற்றங்கள் பதிவாகியிருப்பதாக நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான படுகொலைகளில், துப்பாக்கிச் சூட்டின் மூலமான படுகொலைகள் வியத்தகு உயர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

தொழில் அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் வகையிலான இன்டர்ன்ஷிப் காலத்தில் கொடுப்பனவுகள் வழங்கப்படாததை கண்டித்து ஆயிரக்கணக்கான கியூபெக் மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தின் வணிக மாவட்டமான மொன்ட்றியலில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் வேளையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தாதியர், சமூக பணிகள் போன்ற துறைகளில் தொழில் அனுபவ காலங்களில் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர். பெரும்பாலும் பெண்கள் பணியாற்றும் இத்துறைகளில், தமது வேலைக்குRead More →

யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணைத் தூதரகத்தை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கையை, கனேடிய தூதரகம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 3 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், கனடாவில் வசித்து வருகின்றனர். அவர்களது நன்மை கருதியும் வடக்கு மாகாணத்தில் வாழும் அவர்களது உறவுகளின் நன்மை கருதியும், யாழ்ப்பாணத்தில் கனேடியத் துணை தூதரகத்தை அமைக்க வேண்டுமென, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக எழுத்து மூலம் கோரிக்கைRead More →

துப்பாக்கிகளைத் தடை செய்யும் திடடத்தினை பழமைவாதக் கட்சித் தலைவர் Andrew Sheer நிராகரித்துள்ள அதேவேளை துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுக்குகள் கொண்டுவருவதற்கான ஏழு அம்சக் கொள்கையினையும் அவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விளக்கமளித்துள்ள அவர், ஒட்டுமொத்தமாக துப்பாக்கிகளைத் தடை செய்வதற்கு பதிலாக, சட்டவிரோதமாக துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் குற்றவாளிகளை இலக்கு வைத்து, கனடாவில் துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்தப் போவதாக கூறியுள்ளார். அந்த வகையிலான நடவடிக்கையினை முன்னெடுப்பதே சிறந்தது எனவும், அதற்குRead More →

கனடாவின் சென்.மைக்கேல் தனியார் பாடசாலையில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இவற்றை தடுக்க அப்பாடசாலையில் பழைய மாணவர்களின் உதவி அவசியமென பாடசாலை அதிபர் குறிப்பிட்டுள்ளார். ரொறொன்ரோவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சுமார் 300 பழைய மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய சென்.மைக்கேல் பாடசாலையில் அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பழைய மாணவர்களில் குறிப்பாக மனநல மருத்துவத்தில் தேர்ச்சிபெற்றவர்கள் தமது பாடசாலை மாணவர்களுக்கு உதவலாமென அதிபர் குறிப்பிட்டார்.Read More →