மே 18th: தமிழின அழிப்பு நினைவு நாள். 10ஆம் ஆண்டு நிகழ்வுகள் பற்றிய முக்கிய அறிவித்தல்! 2009ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தின் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான எம்மக்கள் ஆண் பெண் குழந்தைகள் என பாகுபாடின்றி கொல்லப்பட்டு பத்தாண்டுகள் முடிவடைகின்றது. அக்காலகட்டத்தில் பலியான அப்பாவிப் பொதுமக்களுக்குமான நினைவாகவும், இன அழிப்பிற்கான நீதி வேண்டியும் உலகெங்கும் இருக்கும் தமிழ் மக்கள் தவமிருக்கும் ஒரு நாளாக மே 18 அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. பத்தாண்டு கடக்கும் இவ்வருடத்தில்Read More →

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவொயிட் மெக்கினன் மற்றும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் கனேடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ள கூடிய அபிவிருத்தி உதவிகள் குறித்து இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு கனேடிய அரசாங்கத்தின் ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளரின் இலங்கை வருகை குறித்தும், இவ்வருகையின்போது கனேடிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்க கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இதேவேளை ஆளுநருக்கும் இலங்கைக்கானRead More →

ஒண்டாரியோ பாடசாலைகளின் வகுப்பறைகளில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தம் கீழான கிட்டத்தட்ட 400 ஆசிரியர்களுக்கு, வேலை நீக்க கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, பீல் பிராந்திய பாடசாலை கழகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வகுப்பறைகளில் மாணவர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டபோது, ஒரு ஆசிரியர் பணியிடம் கூட அகற்றப்படாது என, மாகாண கல்வியமைச்சர் லிசா தொம்சன் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், பீல் பிராந்தியத்தில், 176 ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கும், 193 இடைநிலை ஆசிரியர்களுக்கும், வரும் ஆகஸ்ட் 31ம் திகதிமுதல்Read More →

அல்பேர்ட்டாவில் இடம்பெற்ற மாகாண அரசுக்கான தேர்தலில், ஏற்கனவே அதிகாரத்தில் இருந்த புதிய ஜனநாயகக் கட்சி அரசு தோற்கடிக்கப்பட்டு, ஐக்கிய பழமைவாதக் கட்சிகள் கூட்டு பெரும்பான்மை வெற்றியியைப் பெற்றுள்ளதை அடுத்து, அதன் தலைவரான ஜேசன் கெனி மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வாகியுள்ளார். முற்போக்கு பழமைவாதக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட UCP எனப்படும் இந்தக் கூட்டணி, கல்கரியில் பெருமளவான ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியில் இருந்த புதியRead More →

ஹமில்ட்டன் பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து 17 வயது சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் மூன்று பதின்ம வயதினரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர்கள் மூவர் மீதும் முதல்தர கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்துள்ளனர். காட்டுப் பகுதி ஒன்றில் வாகன விபத்து இடம்பெற்றதாக கிடைத்த தகவலை அடுத்து, திங்கட்கிழமை இரவு ஹமில்ட்டன் காவல்துறையினர் அங்கு விரைந்ததாகவும், அங்கே கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டRead More →

ரொரன்ரோவின் சைனா டவுன் பகுதியில் இன்று காலையிலிருந்து காவல்துறையினரின் பிரசன்னம் அதிகமாக காணப்படும் நிலையில், குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒப்ரேசன் புளூ ஹொக் என்ற பெயரில் எதிர்வரும் 22ஆம் திகதியிலிருந்து பத்து வாரத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ள சிறப்பு குற்றத்தடுப்பு நடவடிககையின் முன்னோட்டமாக அதிகாரிகளின் இந்த நடமாடட அதிகரிப்பு மேறகொள்ளப்படுவதாகவும், வாகனங்களில் இருந்து திருடுதல், விற்பனை நிலையங்களில் இருந்து திருடுதல், போதைப் பொருள் பாவனைRead More →

வின்னிபெக் பகுதியில் இடம்பெற்ற 12 வயது பெண்ணின் படுகொலை வழக்கில் மனிடோபா றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர். குறித்த பெண் கடைசியாக ஏப்ரல் 18, 2007 -அன்று வின்னிபெக் மேற்கு எல்லை, பகுதியில் தென்பட்டதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார்,குறித்த பெண்ணின் சடலம் செயின்ட் அம்பிரைக்கு அருகில் கண்டெடுத்தனர் இந்நிலையில், குறித்தRead More →

Ravishankar Vallepuram

கடந்த மூன்று வருடங்களாக காணாமல் போயுள்ள 33 வயதான ரவிசங்கர் வல்லிபுரம் என்பவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு Toronto காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இவர் இறுதியாக 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 15 திகதி McLevin Ave மற்றும் Neilson Rd பகுதியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். அதன் பின்பு இவர் வீட்டாரிடமோ அல்லது நண்பர்களிடமோ இதுவரை தொடர்பில் இல்லை. 5′ அடி 8Read More →

காணாமல் போயுள்ள 17 வயதான சஞ்சீ சிவனேஸ்வரராசா (Sanji Sivaeaswararasa) என்ற தமிழ் சிறுவனை கண்டுபிடிப்பதற்காக டொரண்டோ காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சஞ்சி சிவபெருமானை (வயது 17), நேற்று திங்கட்கிழமை, ஏப்ரல் 15, 2019, காலை 11 மணியளவில் Brimley Road & St. Clair Avenue East பகுதியில் இறுதியாக காணப்பட்டுள்ளார். 5’10 ” உயரம் மற்றும், 140Lb எடை உள்ளவர் என விவரிக்கப்படுகிறார். கடைசியாக கருப்புRead More →

பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து, யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த கனேடிய தமிழர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, வேலணை மேற்கு 7ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனடா பிரஜாவுரிமை பெற்ற செல்லப்பா சுந்தரேஸ்வரன்  ஈசன் மாமா ) (Chellappah Sundareswaran; வயது 77) என்பவரே நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர், கடந்த மாதம்Read More →