ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடுவதற்காக நிர்மானிக்கப்பட்ட, கனேடிய போர்க்கப்பலான HMCS கால்கரி, மேற்கு பசிபிக் பிராந்திய பயிற்சிகளுக்கு பதிலாக ஜப்பானிய மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகளுடன் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. சீனாவின் செல்வாக்கு அதிகம் நிறைந்த இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் நடைபெறும் இந்த பயிற்சி நடவடிக்கையில், வொஷிங்டன் மற்றும் டோக்கியோ நிர்வாகங்களும் பங்களிப்பு செலுத்தியுள்ளன. இந்தநிலையில், தென் சீனக் கடலில் கனடாவின் பிரசன்னம் தொடர்ந்தும் இருக்கும் என்ற கல்கரியின்Read More →

வட அமெரிக்காவில் உள்ள இணைய ஊடுருவலாளர்களால் (Hackers) அதிகம் இலக்கு வைக்கப்படும் நிறுவனமாக CIBC எனப்படும் கனேடிய இம்பீரியல் வர்த்தக வங்கி உள்ளது. பிரான்ஸை தளமாக கொண்ட மின்னஞ்சல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மாத்திரம் குறித்த வங்கி மீது போலி மின்னஞ்சல் மூலமான தாக்குதல் முயற்சிகள் 600 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது தனிப்பட்ட தரவுகளைக்Read More →

கனடா டொரோண்டோவில் இருந்து பல ஆண்டுகளாக வெளிவரும் ஒரே ஒரு தமிழர் ஆங்கில ஏடு தமிழ் மிரர் ஆங்கிலப் பத்திரிகையின் வருடாந்த விருது வழங்கும் விழாவும் இரவு விருந்துபசாரமும் (Tamil Mirror Awards Gala 2018) எதிர்வரும் ஞாயிறுக்கிழமை (Nov 11, 2018) அன்று ஸ்காபரோவில் உள்ள Chinese Cultural Centre இல் மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.  பலவேறு துறைகளைச் சார்ந்த திறமை மிக்கவர்கள் சிலர் தெரிந்தெடுக்கப்பட்டு இந்த விருது வழங்கும்Read More →

A PRIVATE WAR (ஒரு ஏகாந்த யுத்தம்) இவ்வாரம் திரைக்கு வந்திருக்கும் இத் திரைப்படம் நிச்சயம் தமிழீழம் குறித்த ஒரு பரவலான கவனத்தை உலகளவில் ஏற்படுத்தும் என்று நம்பலாம். ஏனெனில் கொலிவூட் திரைப்படங்களின் ரசிகப் பரப்பும் அதன் பின்னுள்ள அரசியலும் அத்தகையது.  தமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான மேரி கொல்வின் (War correspondent Marie Colvin) அம்மையாரின் வரலாற்றைப்Read More →

இப்படித்தான் சில புத்தகங்கள் சுவையான தகவல்களை (அரிதானவை கூட!) சுவைபடவே சொல்லியிருந்தாலும், வெளி வந்த பொழுதில் தொடங்கி எவரேனும் அதை எங்கேனும் பதிவு செய்யும் வரை கூட வாசக கவனத்திற்கு வாராதிருப்பதுண்டு. அவ்வாறானவை பாரதி புத்தகாலயத்தில் நிறைய என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறான ரூ.10/- அளவிலான ஒரு சிறு பிரசுரம் ஒன்று இது. பத்து நிமிடங்கள் மட்டுமே அதன் வாசிப்பு காலமாக இருக்கும். ஏப்ரல் 2017ல் பாரதி புத்தகாலயத்தாரால் பதிக்கப்பட்ட இது,Read More →

லோரியர் கிளப் இலையுதிர்கால வரவேற்பு (Laurier Club Fall Reception) டொரோண்டோவில் உள்ள Berkeley Church’ல் நேற்று முன்தினம் Nov 06, 2018 அன்று மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்தேறியது.  இதில் கெளரவ. ஜஸ்ரின் ட்ரூடோ (Hon Justin Trudeau) மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கனேடியர்களுக்கான உண்மையான மாற்றத்தை வழங்கும் வகையில், லாரியர் கிளப் கொடையாளர்களும் பிரமுகர்களும் கனடாவின் பல பாகங்களில் இருந்தும் டொரோண்டோ வில் இந்நிகழ்வுக்காக கூடினார்கள்.Read More →

அமைச்சு பதவியை இராஜினாமா செய்த ஜிம் வில்ஸனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் உறுதி செய்துள்ளார். அவரது அரசாங்கத்தில் நடந்த சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் நீண்ட நாட்கள் மௌனமாக இருந்த அவர் நேற்று (புதன்கிழமை) இதனை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்ட முதல்வர், போதைப்பொருளில் இருந்து விடுபடும் சிகிச்சை காரணங்களுக்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததாக கூறியிருந்தார்.Read More →

இராணுவ வீரர் போல் நடித்து நிதி சேகரித்த குற்றத்திற்காக கனடாவின் ஒன்றாரியோவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோ மாகாணத்திலுள்ள கிழக்கு ஒட்டாவாவில் இவர் ஆள்மாறாட்டம் செய்ததாக குறிப்பிடப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார். 47 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேகநபர், தனது சொந்த நிறுவனமொன்றிற்காக இராணுவ வீரரின் உடைகளை அணிந்து பொது மக்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை நிதி வசூலித்துள்ளார். அது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.Read More →

கடந்த 1939ஆம் ஆண்டு கனடாவுக்குள் புகலிடம்கோரி நுழைந்த யூதர்களை ஏற்க மறுத்தமைக்கு அந்நாட்டு பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார். நாசிசக் கொள்கையாளர்களிடமிருந்து தங்கள் உயிர்களை பாதுகாக்கும் முகமாக, கடந்த 1939ஆம் ஆண்டு மே மாதம் ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரிலிருந்து அமெரிக்காவின் சென் லுர்யிஸ் ஊடாக பாதுகாப்பான இடமாக எண்ணிய கனடாவை அடைய பல யூத மக்கள் முயற்சித்துள்ளனர். அத்துடன், சுமார் 900 யூதர்களைக் கொண்ட கப்பலொன்று கடல் வழியாகRead More →

கனடா ஒன்றாரியோவில் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயில் ஒருவர் உயிரழந்துள்ளார். மேற்கு ஒன்றாரியோவிலுள்ள கிலலொயி ஹகர்டி றிச்சட்ஸ் நகரின் மாஸ்க் வீதியில் நேற்று (புதன்கிழமை) காலை குப்பைமேடொன்றில் தீப்பற்றியுள்ளது. குப்பை மேட்டில் குறித்த தீ உருவான போதிலும், அது அருகிலிருந்த வீடுகளுக்கு பரவியுள்ளது. இத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப்படையினர் குப்பை மேட்டுப் பகுதியில் சடலமொன்றை கண்டெடுத்துள்ளனர். எனினும், குறித்த சடலம் இதுவரை அடையாளங்காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,Read More →