வரும் அக்டோபர் மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள நகரசபை தேர்தலில் Markham நகரசபையின் 7ஆவது தொகுதி கவுன்சிலர் பதவிக்கு பிரபல நடன ஆசிரியை மலர் வரதராஜா அவர்கள் போட்டியிடவுள்ளார். இன்று (ஜூன் 14, 2018) தனது வேட்பு மனுவை அவர் பதிவு செய்துள்ளார். கடந்த மே 01 திகதி இத்தொகுதியில் வசிக்கும் சமூகசேவகரும், பொறியியலாளருமான கிள்ளிவளவன் செல்லையா அவர்கள் இத்தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத்Read More →

கனடாவில் கஞ்சா விற்பனை செய்வதற்கு அரசு இன்று (புதன்கிழமை) சட்டமூலத்தினை அமுல்படுத்தியதனால் கனடாவில் வாழும் மக்கள்  கவலையினை வெளிப்படுத்தியுள்ளனர். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் சிறுவர்களும் இளைஞர்களும் கெட்டுபோய்விடுவார்கள் எனவும் கஞ்சாப் பாவனையின் குறுகிய மற்றும் நீண்டகால விளைவுகளைப் பார்க்கும்போது மார்புப் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபானம் போன்றவற்றை போலவே கஞ்சாவும் சர்வதாரணமாகக் கிடைக்கும். ஆகவே இது மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்குமெனவும் அவர்கள்Read More →

ரொறன்ரோவில் காணாமல் போன தமிழர் ஒருவர் இறந்து போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவில் மார்கம் பகுதியில் வசிக்கும் 57 வயதான பாஸ்கரன் கைலாசபிள்ளை, கடந்த ஆறாம் திகதி காணாமல் போயிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை ரொறன்ரோவில் வைத்து அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக யோர்க் மாகாண பொலிஸார் தெரிவித்தனர். ஆனாலும் அவர் இறந்து போன நிலையில் பூங்கா ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போனவர் கண்டுபிடிக்கப்பட்டார் என்று முன்னர்Read More →

ஒன்ராறியோ மாநிலத்திற்கு கடந்த 7ஆம் திகதி நடாத்தப்பட்ட தேர்தலில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த லிபரல் கட்சியிடம் இருந்து டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் சுமூகமான ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு 3 வாரங்கள் வரையில் ஆகக்கூடும் எனவும் முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். மத்திய அரச மட்டத்தில் செயற்படுபவர்களின் உதவியுடன் இந்தப் பணிகள்Read More →

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மோதலுடன் ஜி7 உச்சி மாநாடு நிறைவறைந்துள்ளது. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜேர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில், உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை தங்களோடு இணைத்துக் கொண்டதால் ரஷ்யா இந்த அமைப்பில் இருந்துRead More →

நடந்து முடிந்த ஒன்ராறியோ மாகாணசபை தேர்தலில் முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் மார்க்கம் தோன்கில் பகுதியில் போட்டியிட்ட லோகன் கணபதி மற்றும் முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. யூன் 7ஆம் நாள் கனடாவின் பெரிய மாகாணமான ஒன்ராரியோவில் நடைபெற்ற 42வது பாராளுமன்றத்திற்கான 124Read More →

G7 மாநாட்டிற்கான கியூபெக்கின் சார்லவொய்க்கில் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸார் பாதுகாப்பினைப் பலப்படுத்தியுள்ளனர். 7 நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் G7 பேச்சுவார்த்தை இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளதையடுத்து வெளியிலிருந்து இடையூறுகள் எதுவும் ஏற்படாமலிருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தையின்போது எந்தநாட்டுத் தலைவர்களையும் வெளியாட்கள் நெருங்காக முடியாதவகையில் 10000 பொலிஸார் மற்றும் இராணுவப்படையினர் பேச்சுவார்த்தை நடைபெறும் இடமான Manoir Richelieu உல்லாச ஓய்வுவிடுதியினைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் G7 மாநாட்டின் எதிர்ப்பாளர்கள்Read More →

ஒன்ராறியோ இன்று தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், தேர்தல் முடிவுகள் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று பெரிதும் எதிர்பார்கககப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி இம்முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதனை அந்தக் கட்சியின் தலைவர் கத்தலின் வின் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் பழமைவாதக் கட்சி அல்லது புதிய சனநாயக கட்சியே வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளமை வெளிப்படையாக எதிர்பார்க்கப்படுகிறது. டக் ஃபோர்ட்Read More →

ஸ்காபரோவில் இடம்பெற்ற காவல்துறையினர் தொடர்புபட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஒருவர் பலியானதுடன், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Hymus வீதி மற்றும் Warden Avenue பகுதியில் நேற்று நள்ளிரவு வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்த பகுதியில் ஆண் ஒருவர் துப்பாக்கியுடன் காணப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, ரொரன்ரோ காவல்துறையினர்Read More →

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனோடு நேற்று (புதன்கிழமை) ஒட்டாவாவில் சந்திப்பொன்றினை மேற்கொண்டார். குறித்த சந்திப்பின்போது ஜனாதிபதியாகிய பின்னர் மக்ரோனின் கனடாவிற்கான முதல் வருகை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதியினைக் கனடாவிற்கு வரவேற்பது தமக்கு கிடைத்த பெருமையெனவும் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் மக்ரோன் எப்போதும் தமது நண்பர் எனவும் பிரான்ஸ் மற்றும் கனடாவிற்கு இடையில் என்ன நடக்கிறது என்பது குறித்து விவாதிப்பதற்கு இந்தRead More →