மே 27ஆம் நாள் ஞாயிறு மாலை மூன்றாவதும் இறுதியானதுமான கட்சித் தலைவர்கள் விவாதமும் நடந்து முடிந்துவிட்டது.  எவரும் பாரிய தவறெதெனையும் செய்யவில்லை என்றே கூறலாம். சனி முதல் முற்கூட்டிய வாக்களிப்பில் மக்களும் வாக்களிக்க ஆரம்பித்துவிட்டனர். இன்னும் 10 நாட்களில் இறுதி வாக்களிப்பு. லிபரல் கட்சியைப் பொறுத்தவரை இத் தேர்தலில் பெரும் சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. அதன் தற்போதைய ஒரே இலக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதல்ல. குறைந்தது 12 ஆசனங்களையாவது பெறுவது.Read More →

ரொறன்ரோவில் East York பகுதியில் உள்ள வீட்டில் நேற்று (சனிக்கிழமை) பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் அதிகாலை 2.15 மணிக்கு வழங்கிய தகவலின் அடிப்படியில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வீட்டில் (41) வயதுடைய பெண் தனிமையில் இருந்த போது ஜன்னல் வழியாக நுழைந்த நபர் ஒருவர் அவரை கொலை செய்திருக்கலாம்Read More →

பற்றிக் பிரவுன்க்கு எதிரான ஒன்டாரியோ முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் தலைமையின் முக்கிய குற்றச்சாட்டு – அவர் ஒரு வயது குறைந்த உயர்நிலைப் பள்ளிப் பெண்ணுக்கு மதுபானம் வழங்கினார் என்பது உண்மை இல்லை – CTV News இப்போது ஒப்புக் கொள்கிறது. குறித்த பெண் Barrie உயர்நிலைப்பள்ளியில் ஒரு மாணவியாக இருந்தபோது, ​​தேசிய கன்சர்வேடிவ் எம்.பி. யாக இருந்த பற்றிக் பிரவுன் ஒரு மதுபான விடுதியில் இருந்து தன் வீட்டிற்கு அழைத்துச்Read More →

கனடா ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சமபவத்தின் பின்னர் தலைமறைவான குற்றவாளிகள் குறித்த சிசிடிவி காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் கனடாவில் பிரபல பாடகர் டிரேக்குடன் இணைந்து உணவு விடுதி ஒன்றை ஆரம்பித்த 28 வயதான ஜாக்ஸன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் குற்றவாளிகள் தொடர்பில் காணொளியை வெளியிட்டுள்ளனர். குறித்த இளைஞரை கருப்பு நிறRead More →

மிசிசாகா குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை கண்டுபிடிக்க பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இச்சம்பவத்தின் சி.சி.டிவி காணொளியை வெளியிட்டுள்ள பொலிஸார், இதன் மூலம் அவர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், குறித்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலுக்குரிய எவ்வித அடையாளமும் இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோ நகருக்கு அருகே ஒன்றாரியோவில் உள்ள மிசிசாகா, பாம்பே பெல் எனப்படும், இந்திய உணவகமொன்றிலேயே நேற்று முன் தினம் (வியாழக்கிழமை)Read More →

கனடாவிற்கு அடைக்கலம் தேடிவரும் அகதிகளுக்கு ரொறன்ரோவில் முகாம்கள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவசரகாலத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றுத் திட்டத்தின்கீழ் ரொறன்ரோவில் குறித்த முகாம்கள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் கோடைக்காலத்தில் கனடாவை நோக்கி அதிகளவில் அகதிகள் வரக்கூடும். அப்போது அந்த நெருக்கடிகளை சமாளிக்க இந்தத் திட்டம் உதவும். ரொறன்ரோவில் உள்ள கல்லூரி ஒன்றின் விடுதியில் 800 பேரைத்Read More →

வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தையில், தாமே வெற்றி பெறுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அதன் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவிடையே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், கனடாவை சமாளிப்பது பெரும் சிரமமான காரியமாக உள்ளது. அத்துடன் நான் எதனைப்Read More →

நெடுஞ்சாலை 401இன் அருகாமையில் மோர்னிங்சைட் அவனியூ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக காணாமல் போனவருடையது என பொலிஸார் இனங்கண்டுள்ளனர். குறித்த உடற்பாகம் கரி எட்வேர்ட் வீசே என்பவருடையது எனவும், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி இவர் காணாமல் போன வேளையில், இவருக்கு வயது 64 எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனுடன் தொடர்பற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மோர்னிங்சைட் அவனியூ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமைRead More →

மிசிசாகாவில் அமைந்துள்ள இந்திய உணவகம் ஒன்றில் நேற்று இரவு குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், குறைந்தது 3 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிசிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதனை பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்களைத் தவிர ஏனைய 12 பேரும் ஆபத்தற்ற காயங்களுடன் இரண்டு உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹோர்ரோன்ராறியோ வீதி மற்றும் எக்ளிங்டன்Read More →

ஒன்ராறியோ மாகாண தேர்தல் நெருங்கும் நிலையில், பழமைவாதக் கட்சிக்கு சமமாக புதிய ஜனநாயக கட்சியும் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதாக அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டியுள்ளன. ஒன்ராறியோ சட்டமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் யூன் ஏழாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்களில் ஆன்ட்ரியா ஹோர்வத் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி மக்கள் ஆதரவு நிலைப்பாட்டில் மூன்றாம் நிலையில் காணப்பட்டது. எனினும் அதன் பின்னரான கருத்துக்க கணிப்புக்களில்Read More →