குடியேற்றத்திற்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம், கனடாவின் இறையாண்மையை பாதிக்காது என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடியர்களிடம் கலந்தாலோசிக்காது ஐ.நா. ஒப்பந்தத்தில் ஏன் கையெழுத்திடப்பட்டது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அதற்கு தொடர்ந்து பதிலளித்த பிரதமர், ”முழு உலகமும் குடியேற்றவாசிகள் தொடர்பான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் கனடா தனது அணுகுமுறைகளை பிற நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்ள முடியும்.Read More →

கனடாவில் கைதுசெய்யப்பட்ட ஹுவாவி நிறுவன அதிகாரி மெங் வான்சூ தொடர்பான வழக்கை சட்ட நடைமுறைகளின் பிரகாரம் தீர்க்கலாமென, அவரது தந்தையும் ஹூவாவி நிறுவனத்தின் நிறுவுனருமான ரென் ஸெங்பெய் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சீனா மத்திய தொலைக்காட்சி சேவைக்கு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கனடாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது புதல்வியின் பாதுகாப்பு தொடர்பாக சீன அரசாங்கம் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதையிட்டு அவர் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்குRead More →

காணாமல் போனவர்களை வெகுவிரைவில் கண்டுபிடிப்பதற்கு கனேடிய அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். புர்கினோ ஃபாசோவில் காணாமல் போன எடித் ப்ளசிஸின் குடும்பத்தினரை கனேடிய அமைச்சர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்ரியா ஃப்றீலண்டம் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மறி க்ளோட் ஆகியோரே இச்சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்தனர். மற்றுமொரு கனேடியர் புர்கினோ ஃபாசோவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று முன்தினம் வெளியான செய்தியைRead More →

கனடாவில் 5G வலையமைப்புகள் மற்றும் ஹூவாவி நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் தொழிநுட்பங்களை தடைசெய்தால் அந்த நாடு பெரும் விளைவுகளைச் சந்திக்கும் என்று கனடாவிற்கான சீன தூதுவர், ஒட்டாவா நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு தரப்புக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்டுள்ள பாரிய வர்த்தக நெருக்கடிகளை அடுத்து அவர் நேற்று (வியாழக்கிழமை) இதனைத் தெரிவித்தார். சீன தூதுவர் லூ ஷாயி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், கனடா எதிர்நோக்கப்போகும் விளைவுகள் தொடர்பாக மேலதிகRead More →

கனடிய தமிழ் காங்கிரஸின் நிதிப்பங்களிப்பின் கீழ், மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பில் கிழக்கு அபிவிருத்தி செயலவையின் கண்காணிப்பு அறிக்கை. கனடிய தமிழ் காங்கிரஸின் நிதிப்பங்களிப்பில், கிழக்கு மாகாணத்தில் சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறியக்கிடைத்தது. இந்த அடிப்படையில் மேற்படி திட்டங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் எமது குழுவினர் கள ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். இந்தக் கள ஆய்வின்போது, நாம் திட்டம் அமுல்படுத்தப்பட்டதாக சொல்லப்படும், இடங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து, நிலைமைகளை ஆராய்ந்தோம். எந்த மக்களுக்காக மேற்படிRead More →

ரொறன்ரோ புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள்மீது போதைப்பொருள் மற்றும் ஆயுதப் பயன்பாடு தொடர்பாக  148 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. டேரம் பொலிஸார், றோயல் கனேடியன் பொலிஸார், ஒன்ராறியோ மாகாணப் பொலிஸார், ரொறன்ரோ, பீல், கிங்ஸ்டன் மற்றும் ஹால்டன் பொலிஸார் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது 2.1 மில்லியன் டொலர் பணமும் போதைப்பொருள் போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 19 பேரில்Read More →

மேற்கு ஆபிரிக்காவின் புர்கினா பாசோ என்ற பகுதியில் கனேடியர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். குறித்த கடத்தல் சம்பவம் மாலியின் எல்லைக்கு அருகே நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிளமெண்ட் சாவாடோகோ, ஜிகாதித் தாக்குதல்களில் அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கம் எச்சரித்துள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். குறித்த நபர் நைஜர் எல்லைக்கு அருகில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதேவேளை குறித்த பகுதியில் கடந்த டிசம்பர் 15 ஆம்Read More →

கடந்த காலங்களில் பல்வேறு ஊடகங்களில் வெளியான கனடிய தமிழர் பேரவை உறுப்பினர் மேலான தகாத நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் அல்லது புகார் தொடர்பான செய்திக்கு கடந்த நவம்பர் (2018) மாத நடுப்பகுதியில் முதன்முதலாக கனடிய தமிழ் காங்கிரஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் பணியாளர் ஒருவர் தரக் குறைவாக நடந்திருக்கிறார் எனக் குற்றம் சாட்டும் புகார் ஒன்று பேரவைக்கு கிடைத்திருக்கிறது. இக் குற்றச்சாட்டைப் பேரவைRead More →

கனடா தஞ்சம் வழங்கிய சவூதி அரேபியாவைச் சேர்நத 18 வயது பெண் (Rahaf Mohammed ), கனடா இவ்வாறு தமக்கு அடைக்கலம் வழங்கி தாம் ரொரன்ரோவை வந்தடைந்த சம்பவம் தன்னையும் அதிஸ்டசாலிகள் பட்டியலில் இணைத்துள்ளது என்று விபரித்துள்ளார். செவ்வாய்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு விபரித்துள்ள அவர், தன்னைப் போன்று தப்பித்துச் செல்ல முயன்ற வேளையில் காணாமல் போன பல பெண்கள் குறித்து தனக்கு தெரியும் என்றும், ஆனால்Read More →

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடியத் தமிழர்களுடன் சேர்ந்து தைப்பொங்கல் கொண்டாடியுள்ளார். ரொறன்ரோவுக்கு அருகே உள்ள மார்க்ஹம் (Markham) பகுதியில் பானையில் பொங்கல் பொங்கி அறுவடைத் திருநாளை அவர் குதூகலமாகக் கொண்டாடினார். கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களையும் பிரதமர் ட்ரூடோ சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். இந்த ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கனடாவில் அதிகளவிலான ஈழ தமிழர்கள் புலம்பெயர்ந்து வசித்து வருகின்றனர். இந்தநிலையிலேயே கனடாவில் பொங்கல்Read More →