கனடாவின் ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையிலான டிரக் வாகன தொடரணி அல்பேர்ட்டாவிலிருந்து ஒட்டாவாவை நோக்கி புறப்படுகிறது. அல்பேர்ட்டாவிலிருந்து இன்று (வியாழக்கிழமை) புறப்படும் டிரக் தொடரணி, நான்கு நாள் பயணமாக ஒட்டாவாவை சென்றடையவுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் பலரும் அதிருப்தி கொண்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்தும் வகையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. சமாதானத்தை விரும்பும், மரியாதைக்குரிய அனைத்து கனேடியர்களுக்கும் இந்த பேரணில் இணைந்துக் கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த டிரக் தொடரணி நாட்டின்Read More →

முன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சனின் பதவி விலகலை தொடர்ந்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பல்வேறு பின்னடைவுகளை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஜொடி வில்சனின் பதவி விலகலுக்கான உண்மையான காரணத்தை லிபரல் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இது ட்ரம்பின் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தின் பின்னடைவாக காணப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இவ்வாறான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் பிரதமர் ட்ரூடோ மறுத்துள்ளார். இதேவேளை, ஜொடி வில்சனுக்கு ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பின் அதனைRead More →

உயரமான கட்டிடத்தின் பல்கனியில் இருந்து அதிவேக நெடுஞ்சாலை (Gardiner Expressway ) மீது நாற்காலியை தூக்கியெறிந்த பெண்ணைக் கைது செய்துள்ளதாக ரொறென்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 19 வயதான மார்செல்லா ஸொய்யா (Marcella Zoia, Age 19 ) என்ற பெண் பெரும் ஆபத்தை உண்டாக்கும் குறும்புச்செயல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கியுள்ளார். அவரது இந்த அபாயம் மிகுந்த குறும்புச்செயல் கமராவில் பதிவுசெய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டிருந்த நிலையில், அந்த காணொளி சுமார் 700,000Read More →

ஸ்காபரோ West Hill குடியிருப்பு பகுதியில் நேற்று (Feb 12, 2019 3 PM) பட்டப்பகல் வேளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Galloway வீதி மற்றும் Lawrence Avenue East பகுதியில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்தப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த முறைப்பாடடினை அடுத்து, அங்கு விரைந்த போது, அங்கே ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில்Read More →

முன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சனின் பதவி விலகல் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மனிடோபா மாகாண தலைநகர் வினிபெக்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவித்த பிரதமர், ”அமைச்சரவை மாற்றம் இடம்பெற்று ஒரு மாதத்திற்குள் ஜொடி வில்சன் பதவி விலகியுள்ளார். ஆனால், அமைச்சரவை மாற்றத்தினால் அதிருப்தி அடைந்து அவர் பதவி விலகியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கவில்லை. அமைச்சரவைRead More →

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் அமைச்சரவையிலிருந்து முன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சன் இராஜினாமா செய்துள்ளார். கனேடிய பொறியியலாளர் நிறுவனமொன்றின் மீது வழக்கு தொடர்வதை தவிர்க்குமாறு பிரதமர் அலுவலகம் அவர் மீது அழுத்தம் பிரயோகித்து வந்தது. இதனையடுத்தே அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். எனினும், தனது பதவி விலகலுக்கான காரணம் தொடர்பாக இராஜினாமா கடிதத்தில் அவர் எதனையும் சுட்டிக்காட்டவில்லை. கனத்த இதயத்துடன் அமைச்சரவையில் இருந்து விலகுவதாக பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளRead More →

மிசிசாகாவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் இன்று காலையில சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகி்றனர். Burnhamthorpe Road West மற்றும் Ridgeway Drive பகுதியில், Rushton Crescentஇல் உள்ள வீடு ஒன்றுக்கு, இன்று காலை 7.15 அளவில் அழைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் அங்கு சென்ற போது, அந்த வீட்டினுள் 74 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில்Read More →

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, பாரிய சட்டவிரோத சர்வதேச பண பரிமாற்ற வலைப்பின்னல் தொடர்பில் கனேடிய மத்திய காவல்துறையினர் 17பேரை கைது செய்துள்ளனர். இன்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த தகவலை வெளியிட்டுள் கனேடிய மத்திய காவல்துறையினர், குறித்த அந்த மோசடிக் கட்டமைப்பு மொன்றியல் மற்றும் ரொரன்ரோ ஆகிய இடங்களில் செயற்பாடுகளை கொண்டிருந்ததாகவும், மொன்றியலில் உள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பணம், இந்த அமைப்பு மூலம்Read More →

நேற்று இரவு 11 மணியளவில், மிசிசாகா Main Street மற்றும் Queen Street South பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அங்கே இருவர் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், அவர்களில் பெண் ஒருவர் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டRead More →

தென்மேற்கு எட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். இரண்டு கார்கள் மோதிக்கொண்டதனாலேயே தென்மேற்கு எட்மன்டனின் நெடுஞ்சாலை 39 மற்றும் ரேஞ்ச் ரோட் 53 அருகில் நேற்று(திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.Read More →