Danforth பகுதியில் அமைந்துள்ள மதுபாண விடுதி ஒன்றில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அங்கே துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Danforth avenue மற்றும் Carlaw avenue பகுதியில் அமைந்துள்ள “Rivals Sports Bar” எனப்படும் கேளிக்கை மதுபாண விடுதியில், நேற்று அதிகாலை 2.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்த விடுதியினுள் இரண்டு ஆண்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல், வெளியே வீதி வரைRead More →

நோர்த் யோர்க்கில் உணவுப்பொருட்களை வீடுகளுக்கு கொண்டுசென்று வழங்கும் ஆண் ஒருவரை கத்தியால் குத்தி, அவரிடமிருந்த உணவுப்பொருட்களை அபகரித்த சம்பவம் தொடர்பாக பதின்ம வயதினர் இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு, குறித்த அந்த உணவு விநியோகஸ்தர் ஜேன் வீதி மற்றும் ஹீத்ரோ டிரைவ் பகுதியில் இருந்த சமயம், தலைவரை மூடி குளிர் அங்கியை அணிந்திருந்த இருவர் அவரை அணுகி, கத்தியால் குத்தி, அவர் விநியோகத்திற்காகRead More →

இந்த நிதிஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் சமூக, சுற்றுச்சூழல் அபிவிருத்தி மற்றும் வறுமை போன்றவற்றை மையமாக கொண்டே திட்டமிட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா நிதி அமைச்சர் கரோல் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இந்த நிதிஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படவுள்ள நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் விமர்சங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். மேலும், சிறுபான்மையினரின் வாழ்க்கைமுறை மற்றும் சேவைகளை மேம்படுத்தல், ஒருநிலையான பொருளாதாரத்தை உறுதிசெய்தல் போன்றனவே புதியRead More →

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கனடாவின் வேலையின்மை விகிதம் 43 ஆண்டுகளை விட 5.6 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. பலர் வேலைவாய்ப்புக்களை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கியிருந்த நிலையில் அரசாங்கம் ஜனவரி மாதத்தில் 66,800 புதிய வேலைகளை வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. இருப்பினும் இது 2018 ஆம் ஆண்டு வாக்கில் 163,000 வேலைவாய்ப்புக்களாக இருந்தன என்றும் தற்போது காணப்படும் புதிய வேலைகள், கடந்த ஆண்டுகளை விட பல சதவிகிதங்கள் குறைவு எனவும் கனடாRead More →

கனடாவின் துறைமுக நகரான ஹமில்டனில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் ஒன்றுடன் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 38, 35 மற்றும் 30 வயதானவர்களே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 38 வயதான நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. இந்தநிலையில் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துRead More →

ஹெய்டி வன்முறையில் சிக்கி கொண்ட நூற்றுக்கணக்கான கனேடியர்கள் பத்திரமாக மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். ஹெய்டி ஜனாதிபதியின் பதவி விலகலை வலியுறுத்தி ஹெய்டியின் முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் வன்முறை போராட்டம் காரணமாக சுமார் 100 இற்கும் அதிகமான கனேடியர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் பத்து பேர் கொண்ட கனேடிய மருத்துவக்குழுவும் உள்ளடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்தநிலையில் வன்முறையில் சிக்கி கொண்ட நூற்றுக்கணக்கான கனேடியர்கள் பத்திரமாகRead More →

எட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். அதிகவேக நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் இரண்டு கார்களினதும் சாரதிகள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் விபத்தில் காயமடைந்த 31 வயதான பெண் ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் சிறிய காயங்களுடன் மயிரிழையில் உயிர்தப்பிய 48 வயதான மற்றுமொருவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகRead More →

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆயுத முனையில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வெள்ளிக்கிழமை பெண் ஒருவர் ஆயுத முனையில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். நண்பர்களுடன் களியாட்ட விடுதி ஒன்றுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து  அவசர பொலிஸ் சேவைக்கு அறிவிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண் கடத்திச் செல்லப்படும் போது அவர் பயணித்த காரிலிருந்தRead More →

உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்தினை கலைஞர் ஒருவர் பனியில் வரைந்து அசத்தியுள்ளார். ரொறன்ரோவினைச் சேர்ந்த 73 வயதான Robert Greenfield என்ற கலைஞரே இவ்வாறு பனியில் வரைந்து அசத்தியுள்ளார். குறித்த கலைஞர் இவ்வாறு உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்தினை பனியில் வரையும் காணொளி சமூக இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 73 வயதான Robert Greenfield என்ற குறித்த கலைஞரின் பனியில் ஓவியம் வரையும் திறனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். உலகப்புகழ் பெற்ற மோனாலிசாRead More →

ரொறன்ரோவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். ரொறன்ரோவின் பில்லி பிஷப் விமான நிலையத்தில் நேற்று(சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து காரணமாக குறித்த விமான நிலையத்தில் நேற்று மாலை சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. குறித்த விபத்தில் விமானி காயமடைந்த நிலையில், சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக விமான சேவை நிறுவனம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.Read More →