கட்டுரை: Scarborough Centre for Healthy Communities
தடுப்பூசி பதிவு என்றால் என்ன?
தடுப்பூசி பதிவு அட்டை (மஞ்சள் அட்டை என்றும் அழைக்கப்படுகிறது) என்பது குழந்தையின் மருத்துவர் அல்லது சுகாதார சேவை வழங்குபவர் தடுப்பூசிகள் எடுத்ததைக் குறிக்கும் ஒரு அட்டை அல்லது புத்தகம். இது தடுப்பூசி எடுத்ததற்கான ஆதாரமாக விளங்குகிறது.
Immunization of School Pupils Act, 1990 (ISPA) மற்றும் Child Care and Early Years Act, 2014 (CCEYA) படி, ஒன்டாரியோவில் (Ontario) பள்ளி மற்றும் களஞ்சிய பராமரிப்பு சேவைகளுக்கு செல்லும் குழந்தைகள் 9 வகை நோய்களுக்கு எதிராக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் அல்லது விலக்கு சான்று வைத்திருக்க வேண்டும். அவை: மீஸில்ஸ் (Measles), மும்ப்ஸ்(Mumps), ருபெல்லா(Rubella), டிப்தீரியா (Diptheria), டெட்டனஸ் (Tetanus), போலியோ (Polio), மெனிஞ்சோகோகல் (Meningococcal), பெர்டூசிஸ்/இருமல் (Pertussis/Whooping cough), வரிசெல்லா/சிக்கன்பாக்ஸ் (Varicella/Chickenpox) – 2010-ம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பிறந்த மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்த மஞ்சள் அட்டையில் உள்ள தகவல்களை Toronto Public Health (அல்லது தங்களது உள்ளூர் பொது சுகாதாரத் துறைக்கு) இணையத்தில் அல்லது மின்னஞ்சல், ஃபாக்ஸ் (fax), அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் குழந்தையின் தடுப்பூசி பதிவை Toronto Public Health-க்கு எப்படி சமர்ப்பிப்பது?
Toronto-வில், உங்கள் குழந்தையின் தடுப்பூசி பதிவை Toronto Public Health (TPH)-க்கு நேரடியாக அனுப்ப வேண்டும். 16 அல்லது 17 வயதுடைய இளைஞர்கள் தங்களுடைய பதிவு தாங்களே சமர்ப்பிக்கலாம். பள்ளிகள் இந்த பதிவுகளை சேகரிக்க அல்லது அனுப்ப முடியாது.
சமர்ப்பிக்கும் வழிகள்:
- இணையம் மூலம் (ICON – Immunization Connect Ontario): toronto.ca/Student Vaccines இணையதளத்தை திறந்து ICON-ஐ பயன்படுத்தவும். உங்கள் குழந்தையின் Ontario Health Card எண்ணை அல்லது Ontario Immunization ID (OIID) எண்ணை பயன்படுத்தி உள்நுழைக. உதவி தேவைப்பட்டால்: 416-338-7600 என்ற எண்ணிற்கு அழைத்து Option 2 தேர்ந்தெடுக்கவும்.
- தபால் மூலம்:
Toronto Public Health
Vaccine Preventable Diseases
5100 Yonge Street, 2nd Floor,
Toronto, ON, M2N 5V7
- ஃபாக்ஸ் (Fax):
பதிவுகளை 416-338-2487 என்ற எண்ணிற்கு ஃபேக்ஸ் செய்யவும். உங்கள் குழந்தையின் பெயர், பிறந்த தேதி, OIID/Health Card எண்ணும், உங்கள் தொடர்பு தகவலும் சேர்க்கவும்.
- மின்னஞ்சல்:
[email protected] என்ற மின்னஞ்சலுக்கு பதிவின் நகலை அனுப்பவும்.
ICON அமைப்பு என்றால் என்ன?
ICON (Immunization Connect Ontario) என்பது ஒரு பாதுகாப்பான ஆன்லைன்(online) கருவி ஆகும். இதன்மூலம் பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் நேரடியாக சுகாதார பிரிவிற்கு தடுப்பூசி பதிவுகளை சமர்ப்பிக்கலாம். இது எளிமையான முறையாகும்.
இணைப்பு: https://tph.icon.ehealthontario.ca
ஒன்டாரியோவில் (Ontario) புதிதாக வந்தவர்கள் – சர்வதேச பதிவுகளை சமர்ப்பிப்பது எப்படி?
வேறு மாகாணம் அல்லது நாட்டிலிருந்து ஒன்டாரியோவுக்கு (Ontario) வந்தால், உங்கள் குழந்தையின் தடுப்பூசி பதிவுகளை Toronto Public Health-க்கு சமர்ப்பிக்க வேண்டும்.
முந்தைய இடத்தில் இருந்த உங்கள் பதிவுகளை/தடுப்பூசி ஆவணங்களை கொண்டுவரவும்.
ஆவணங்கள் வேறு மொழியில் இருந்தாலும் ஏற்கப்படும். மொழிபெயர்ப்பு இருந்தால் உதவியாக இருக்கும்.
உங்கள் குழந்தையை ஒரு மருத்துவரிடம் அல்லது வாக்-இன் கிளினிக்கில் (Walk-in Clinic) அழைத்துச் செல்லவும்:
தடுப்பூசிகள் சரிபார்க்கப்படும்
தேவைப்பட்டால் தடுப்பூசிகள் வழங்கப்படும்
Ontario மஞ்சள் அட்டை நிரப்பப்படும்
பிறகு ICON, மின்னஞ்சல், ஃபாக்ஸ் (fax), அல்லது தபால் வழியாக பதிவு சமர்ப்பிக்க வேண்டும்.
தடுப்பூசி எச்சரிக்கை கடிதம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
Toronto Public Health-இல் இருந்து ஒரு எச்சரிக்கை கடிதம் வந்தால், அது குழந்தையின் தடுப்பூசி பதிவு முழுமையாக இல்லை என்பதைக் குறிக்கும்.
முதலில், உங்கள் குழந்தையின் தடுப்பூசி பதிவுகளை சரிபார்க்கவும்.
தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் ஏற்கனவே எடுத்து இருந்தால், உடனடியாக ICON, மின்னஞ்சல், ஃபாக்ஸ்(fax) அல்லது தபால் வழியாக பதிவு செய்யவும்.
தடுப்பூசிகள் ஏதும் குறைந்திருந்தால்:
உங்கள் மருத்துவரிடம் அல்லது toronto.ca/StudentVaccines வழியாக சமுதாய கிளினிக்கில் (Community Clinic) இலவச தடுப்பூசி பெறுங்கள்.
உதவிக்கு: 416-338-7600 (Option 2) அழைக்கவும், அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
உங்கள் குழந்தைக்கு OHIP இல்லையென்றால் என்ன செய்வது?
OHIP இல்லாவிட்டாலும், பள்ளிக்கூடத்திற்குத் தேவையான தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். குழந்தைக்கு தடுப்பூசிகள் மறுக்கப்படாது.
Toronto Public Health மற்றும் சமூக சுகாதார மையம் (Community Health Centres (CHC) OHIP இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி வழங்குகின்றன.
உங்கள் முந்தைய மாநிலத்தில் பெற்ற தடுப்பூசி ஆவணங்களை கொண்டு வாருங்கள்.
ஒரு நர்ஸ் (nurse) அவை சரிபார்த்து தேவையான தடுப்பூசிகளைச் சொல்லுவார்.
உதவிக்கு: 416-338-7600 அழைக்கவும். மொழிபெயர்ப்பு சேவைகளும் கேட்கலாம்.
இறுதி குறிப்புகள்:
உங்கள் குழந்தையின் சர்வதேச தடுப்பூசி பதிவுகளை சமர்ப்பிப்பது, Ontario பள்ளி நிபந்தனைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது மற்றும் அனைத்து மாணவர்களின் ஆரோக்கியத்தைக் காக்கிறது.
உதவி தேவைப்பட்டால்:
Toronto Public Health – 416-392-1250
HealthFacts+ சேவையை பார்வையிட: www.shn.ca/vaxfacts




