Reading Time: < 1 minute

தேவையானவை :

Tamil Business Directory

மட்டன் – அரைகிலோ
வெங்காயம் – இரண்டு
தக்காளி – ஒன்று
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – ஆறு பற்கள்
மிளகு – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
பட்டை லவங்கம் ஏலக்காய் – இரண்டு
மிளகாய்த்தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்
தனியாத்தூள் – மூன்று டேபிள் ஸ்பூன்
மஞ்சத்தூள் – அரை டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி புதினா – சிறிது
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – இரண்டு கரண்டி

செய்முறை :

  1. மட்டனை சிறிய துண்டுகளாக,வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்,
  2. சிறிது எண்ணெயில் நறுக்கிய ஒரு வெங்காயம் மிளகு இஞ்சி பூண்டு மற்றும் வாசனைப் பொருட்களைப் போட்டூ வதக்கி அரைத்து வைக்கவும்,
  3. குக்கரில் எண்ணெயைக் காயவைத்து சோம்பை போடவும்பின்பு வெங்காயம் தக்காளியைப் போட்டு வதக்கவும்,
  4. பின்பு கறியைப் போட்டு வதக்கி அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும்,
  5. பின்பு உப்பு மஞ்சத்தூளைப் போட்டு ஒரு கோப்பை நீரைச் சேர்த்து வேகவிடவும்,
    பிறகு வெந்த கறியை கடாயில் கொட்டி அதில் மிளகாய்த்தூள்,தனியாத்தூளை போட்டு கிளறவும்,
  6. மசாலா நன்கு வதக்கி கொத்தமல்லி புதினாவைத் தூவி இறக்கவும்.