15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிட்னி லக்ஹானி எனப்படும் அந்த சிறுமியை கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஈஸ்ட் யோர்க்கின் Cosburn avenue மற்றும் Coxwell avenue பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணியளவில் கடைசியாக அவர் காணப்பட்டதாகவும், அதன்பின்னர் அவரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தனது செல்லப்பிராணியான நாயுடன் அவர் நடைபயிற்சிக்கு சென்றிருந்த நிலையிலேயேRead More →

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவரான பற்றிக் பிரவுண், மேயர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். எதிர்வரும் பிரம்ரன் நகர மேயர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த அவர், தற்போது தனது பெயரை பிரம்ரன் நகர சபைக்கு சென்று பதிவுசெய்துள்ளார். அவர் எதிர்வரும் பிரம்ரன் நகர மேயர் பதவிக்கான தேர்தலில், பிரம்ரன் மேயர் லின்டா ஜெவ்ரியை எதிர்த்து போட்டியிடவுள்ளார். ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைவராக இருந்த பற்றிக் பிரவுண் பாலியல்Read More →

ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் நகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைப்பங்காக குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளார். குறிப்பாக ரொரன்ரோ மாநகரசபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதன்போது தெரிவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ள 47 உறுப்பினர்களின் எண்ணிக்கையை, 25ஆக குறைப்பது முதல்வர் டக் ஃபோர்ட்டின் திட்டமாக உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் டக் ஃபோர்ட்டின் இந்த திட்டம் குறித்த தகவல்கள் நேற்று இரவு வெளியானதுடன், இன்று காலை 9 மணிக்குRead More →

அமெரிக்காவில் இருந்து தஞ்சம் கோருபவர்களின் செலவுகளை ஈடு செய்வதற்கு ஒன்றாரியோ அரசாங்கம் மத்திய அரசிடம் 200 மில்லியன் டொலர்களை கோரியுள்ளது. ஒன்றாரியோவின் குழந்தைகள், சமூகம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் லிசா மெக்லோட், நேற்று (வியாழக்கிழமை) கடிதம் மூலம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். மேலும், “சட்டவிரோத எல்லை கடத்துதல்” பிரச்சினையை நிர்வகிப்பதில் மத்திய அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார். தஞ்சம் கோருபவர்களின் அதிகரிப்பு காரணமாக நெருக்கடி நிலைRead More →

வரும் அக்டோபர் மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள நகரசபை தேர்தலில் மார்க்கம் நகரசபையின் 5ஆவது வட்டாரத்திற்கான நகரசபை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை இத்தொகுதியில் வசிக்கும் சமூகசேவகரும், கனடாவில் தமிழ் ஊடகத்துறையில் பலவருடகாலமாக சேவையாற்றியவருமான ஸ்ரீஸ்கந்தகுமார் சிவசுப்ரமணியம் (TVI/CMR ஸ்ரீ அண்ணா) அவர்கள் இத்தொகுதிக்கான தனது வேட்பு மனுவை இன்று (ஜூலை 26, 2018) பதிவு செய்துள்ளார். இத்தொகுதியில் போட்டியிடும் ஒரே ஒரு தமிழர் ஸ்ரீஸ்கந்தகுமார் சிவசுப்ரமணியம் என்பதுRead More →

மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்தில் நகரசபை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் தனது விண்ணப்பத்தை யுவனீதா நாதன் (Juanita Nathan) இன்று மீளப்பெற்றுள்ளார். கடந்த எட்டு வருடங்களாக தான் வகித்த வந்த மார்க்கம் நகரசபையின் 7ம், 8ம் வட்டார கல்விச் சபை அறங்காவலருக்கான பதவிக்கு மீண்டும் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார் என ஊடகங்களுக்கு இன்று தெரியப்படுத்தியுள்ளார். கடந்த மூன்று தவணைகளாக நகரசபை உறுப்பினராக இருந்து பின்னர் மாகாண சபைRead More →

ரொறன்ரோ மாநகரசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் மேயர் மெல் லாட்மனின் மகன் Blayne Lastman தெரிவித்துள்ளார். மேஜர் வேட்பாளரராக போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் குடும்பத்தவருடன் கலந்துரையாடிய பின்னர் இன்று (வியாழக்கிழமை) அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் குடும்பத்துடன் மேற்கொண்ட ஆலோசனையின் பின்னர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த தேர்தலில் மேயர் ஜோன் டோரிRead More →

வரும் அக்டோபர் மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள நகரசபை தேர்தலில் மார்க்கம் நகரசபையின் 7ஆவது வட்டாரத்திற்கான 7ஆவது தமிழ் பெண் வேட்பாளர் களத்தில். மார்க்கம் நகரசபையின் 7ஆவது வட்டாரத்திற்கான நகரசபை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் கீர்த்திகா லோகன் கணபதி (Kethika Logan Kanapathi) போட்டியிடுகின்றார். ஏற்கனவே இந்தத் தொகுதியில் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக பதிவு செய்துள்ள நிலையில் கீர்த்திகா லோகன் கணபதி ஏழாவது வேட்பாளராக தனது ‌பெயரைப் பதிவு செய்துள்ளார். இந்தத்Read More →

ரிச்மண்ட் ஹில் பகுதியில் 20 வயது பெண் ஒருவர் மரணம் தொடர்பில் சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 20 வயதுடைய அலிஸ்ஸா லைட்ஸ்டோன் என்பவர் உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 2:30 மணியளவில் ஒருவரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 25 வயதுடையவர் என்றும், இவர்Read More →

கனடா – ரொறன்ரோ பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 29 வயதான ஃபைசல் ஹூசைன் என்பவரே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என ஒன்றாரியோ விசேட விசாரணை பிரிவினர் கூறியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 14 பேர் காயமடைந்ததோடு, அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இந்நிலையில், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் சந்தேகநபர் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஃபைசல்Read More →