கனேடிய விமானப்படையில் ஆளில்லா போர் விமானங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக, கனேடிய விமானபடையின் தலைவர் லெப்ரினன்ட் ஜெனரல் அல் மைன்ஸிங்கர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆறாண்டு காலப் பகுதியில் இவ்வாறு ஆளில்லா ஆயுதம் தாங்கிய போர் விமானங்களை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், எதிர்வரும் 20 ஆண்டு காலப் பகுதிக்காக கனடிய விமானப் படைக்காக 62 பில்லியன் நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்வதுRead More →

யாழ்ப்பாணத்தில் கிருஸ்தவ மத போதகரை விளக்கமறியில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனடா நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து, நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் உள்ளதாக தெரிவித்த சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸார், இந்த வழக்குத் தொடர்பாக விசாரணைகள்Read More →

டொரோண்டோவின் தொடர் கொலையாளி Bruce McArthurக்கு, 25 ஆண்டுகளின் பின்னரே பிணைக்கு விண்ணப்பிக்க முடியும் எனும் உத்தரவோடு, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு ஈழத்தமிழர்கள் உள்ளடங்கலாக, 8 பேரை படுகொலை செய்த Bruce McArthur, அக்கொலை குற்றச்சாட்டுக்களை கடந்த வாரம் நீதிமன்றில் ஒப்புக்கொண்டிருந்தார். அவை பற்றிய விரிவான விபரங்கள் நீதிமன்றத்தால் கேட்டறியப்பட்டு வந்த நிலையில், இன்றையதினம் தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கனடாவில் மரணதண்டனை இல்லை என்பதும், கொலைகளுக்குRead More →

வங்கி ATM இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ரொரன்ரோவில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ள வெவ்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலான சந்தேக நபர் ஒருவரை விசாரணை அதிகாரிகள் தேடி வருகின்றனர். பெப்ரவரி முதலாம் திகதி இரவு 7.21 அளவில், நெடுஞ்சாலை 404ற்கு கிழக்கே, Victoria Park avenue மற்றும் Van Horne avenue பகுதியில் உள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் கொள்ளை இடம்பெற்றதாக தமக்கு முறைப்பாடு கிடைத்ததாகவும், உடனடியாக அங்கு விரைந்ததாகவும் ரொரன்ரோRead More →

இன்று காலை வேளையில் (01:45 AM, Feb 08, 2019) Queen Street East பகுதியில் உள்ள இரவுக் கேளிக்கை விடுதி ஒன்றில் வைத்து ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த அந்தப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக அதிகாலை 2 மணியளவில் கிடைத்த பல்வேறு முறைப்பாடுகளை அடுத்து Parliament Streetஇல் உள்ள குறித்த அந்த இடத்துக்கு விரைந்ததாகவும், அங்கே உள்ள முகப்பு மண்டபத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்Read More →

எட்மன்டனில் கடந்த நாட்களாக நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக வாகனத் தரிப்பிட கட்டணம் அறவிடும் இயந்திரம் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் ஓட்டுனர்களுக்கு அவதியுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பெண்ணொருவர் 311க்கு வழங்கிய முறைப்பாட்டினை அடுத்தே இவ் விடயம் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சேவையை பெற்றுக்கொள்ளும் போது தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டால், பைலட் டிக்கெட் நிர்வாகதிடம் மறுபரிசீலனைRead More →

ஒன்ராறியோவை சேர்ந்த ஒரு பெண்ணொருவர் தனது மரண அறிவித்தலை தானே எழுதியிருப்பது தற்போது உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. தனது 82ஆவது வயதில் இம்மாதம் 2ஆம் திகதி சைபால் மேரி ஹிக்ஸ் இறந்தார். குறித்த தினத்திலேயே அவரது மரண அறிவித்தல் வெளியானது. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “எனது மூத்த மகள் பிரெண்டா அருகில் இருக்க, 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி காலை 8.20 மணியளவில் எனது உயிர் அமைதியாகRead More →

கலிடன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்திற்கு இயற்கை எரிவாயுவே காரணம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது வேண்டுமென்றே நடந்ததா என்பது தொடர்பில் தெளிவில்லாமல் இருப்பதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலிடன் கிராமத்திற்கு அருகே மப்பிள் கிரோவ் வீதி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6:20 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் அடுத்து அங்கு குடியிருந்தRead More →

சீனாவுடனான முரண்பாடுகள் காரணமாக கனேடிய பல்கலைக்கழகங்கள் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிதியியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் ‘மூடிஸ்’ முதலீட்டார் சேவை நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடனாவிற்கும், சீனாவிற்கும் இடையே இராஜதந்திர நெருக்கடிகள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக கனேடிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சீன மாணவர்களை சீனா நாட்டிற்கு திருப்பி அழைக்கும் பட்சத்தில் இந்த அபாயம் ஏற்படும் என குறித்த அமைப்பு எச்சரித்துள்ளது.Read More →

கனடாவில் கடந்த சில மாதங்களாக பனிச்சறுக்குப் போட்டிகள் களைகட்டி வருகின்றன. இந்த போட்டியை காண ரஷ்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த மக்கள் பனிச்சறுக்கு போட்டியை பார்வையிட்டனர். நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டிகள் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த பனிச்சறுக்கு போட்டியில் பரந்து விரிந்த பனி மலையில், வீரர்கள் பனிச்சறுக்கில் ஈடுபட்டனர். கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 401 மீட்டர் உயரத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றது. இதில்Read More →