கனடாவில் தேசிய படுகொலை விகிதம் கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத வகையில் கடந்த ஆண்டு கடுமையான அதிகரிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை கும்பல்கள் மற்றும் துப்பாக்கிச்சூடுகளின் அதிகரிப்பே இப்படுகொலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த ஆண்டு மாத்திரம் 660 கொலைக் குற்றங்கள் பதிவாகியிருப்பதாக நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான படுகொலைகளில், துப்பாக்கிச் சூட்டின் மூலமான படுகொலைகள் வியத்தகு உயர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

தொழில் அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் வகையிலான இன்டர்ன்ஷிப் காலத்தில் கொடுப்பனவுகள் வழங்கப்படாததை கண்டித்து ஆயிரக்கணக்கான கியூபெக் மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தின் வணிக மாவட்டமான மொன்ட்றியலில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் வேளையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தாதியர், சமூக பணிகள் போன்ற துறைகளில் தொழில் அனுபவ காலங்களில் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர். பெரும்பாலும் பெண்கள் பணியாற்றும் இத்துறைகளில், தமது வேலைக்குRead More →

யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணைத் தூதரகத்தை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கையை, கனேடிய தூதரகம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 3 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், கனடாவில் வசித்து வருகின்றனர். அவர்களது நன்மை கருதியும் வடக்கு மாகாணத்தில் வாழும் அவர்களது உறவுகளின் நன்மை கருதியும், யாழ்ப்பாணத்தில் கனேடியத் துணை தூதரகத்தை அமைக்க வேண்டுமென, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக எழுத்து மூலம் கோரிக்கைRead More →

துப்பாக்கிகளைத் தடை செய்யும் திடடத்தினை பழமைவாதக் கட்சித் தலைவர் Andrew Sheer நிராகரித்துள்ள அதேவேளை துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுக்குகள் கொண்டுவருவதற்கான ஏழு அம்சக் கொள்கையினையும் அவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விளக்கமளித்துள்ள அவர், ஒட்டுமொத்தமாக துப்பாக்கிகளைத் தடை செய்வதற்கு பதிலாக, சட்டவிரோதமாக துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் குற்றவாளிகளை இலக்கு வைத்து, கனடாவில் துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்தப் போவதாக கூறியுள்ளார். அந்த வகையிலான நடவடிக்கையினை முன்னெடுப்பதே சிறந்தது எனவும், அதற்குRead More →

கனடாவின் சென்.மைக்கேல் தனியார் பாடசாலையில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இவற்றை தடுக்க அப்பாடசாலையில் பழைய மாணவர்களின் உதவி அவசியமென பாடசாலை அதிபர் குறிப்பிட்டுள்ளார். ரொறொன்ரோவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சுமார் 300 பழைய மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய சென்.மைக்கேல் பாடசாலையில் அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பழைய மாணவர்களில் குறிப்பாக மனநல மருத்துவத்தில் தேர்ச்சிபெற்றவர்கள் தமது பாடசாலை மாணவர்களுக்கு உதவலாமென அதிபர் குறிப்பிட்டார்.Read More →

கனடாவின் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாண மக்களை இலைகோசை சாப்பட வேண்டாமென கனேடிய பொதுச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. குறித்த இரு மாகாணங்களிலும் இலைகோசை உட்கொண்ட 18 பேர் பக்ரீரியா தொற்றுக்கு உள்ளாகியமை நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்டறியப்பட்டது. கியூபெக் மாகாணத்தில் 15 பேரும் ஒன்றாரியோ மாகாணத்தில் மூன்று பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இலைகோசை சாப்பிட வேண்டாமென குறித்த மகாண மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Read More →

ரொரன்ரோவில் இந்த ஆண்டு துப்பாக்கிச் சூட்டுக் கொலைகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை உண்டாக்கியுள்ளது. ஸ்காபரோவில் நேற்று முன்தினம் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன், ரொரன்ரோவில் இந்த ஆண்டில் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 90ஐ எட்டியுள்ளது. இதற்கு முன்னர் 1991ஆம் ஆண்டிலேயே ரொரன்ரோவில் அதிகளவானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பதிவுகள் இருந்த நிலையில், தற்போது அந்த பதிவுகளையும் விஞ்சி இந்த ஆண்டின் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகளின்Read More →

கனடாவில் 90 சதவீத பிளாஸ்ரிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளாஸ்ரிக் மாசுபாட்டை கையாள்வது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் தொடர்பான கனேடிய அமைச்சர்களின் கவுன்சில் அதிகாரிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒட்டாவாவில் சந்தித்து பிளாஸ்ரிக் மாசுபாட்டை கையாள்வது தொடர்பாக கலந்துரையாட எதிர்பார்த்துள்ளனர். பிளாஸ்ரிக் மாசுபாட்டை எதிர்த்து போராடுவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் கடப்பாடு குறித்து ஆலோசனையளிக்கும் வகையில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்ரிக் பொருட்களின்Read More →

கனடாவின் வடக்கு பகுதியிலுள்ள வீதிகள், பாலங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியளிக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிராந்தியங்களின் போக்குவரத்து சவால்களை சமாளிப்பதற்கான நிதியுதவிக்கான பரிந்துரைகளை போக்குவரத்து கனடா அமைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கோரவுள்ளது. அதன்படி, பிராந்திய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கமாக தெரிவுசெய்யப்பட்ட திட்டங்களுக்கு நிதியளிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. வடக்கு போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி,Read More →

கிங்ஸ்டன் பொது வைத்தியசாலைக்கு உள்ளே கைதி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக கிழக்கு ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து கைதி ஒருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இதில் ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்துள்ளார். இதன் பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது பணியாளர்களும் வைத்தியசாலையின்Read More →