ரொறன்ரோ மேயர் தேர்தலுக்கு என்னும் 11 நாட்களே உள்ள நிலையில் ஜோன் றொரிக்கு வெற்றி பெருவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக ஃபோர்ப்ஸ் ரிசர்ச் தலைவர் கூறியுள்ளார். ஏதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதி ரொறன்ரோ மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்ந நிலையில் குறித்த தேர்தலில் ரொறன்ரோ மேயர் ஜோன் றொரிக்கு எதிராக முன்னால் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மாட் போட்டியிடுகின்றார். அந்த வகையில் தற்போது மேற்கொண்ட கருத்து கணிப்பின்படிRead More →

கடந்த வருடம் கிராண்ட் ஆற்றில் மூழ்கிய மூன்று வயது சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் அவரது தாயார் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி குறித்த பெண் ஓட்டிச்சென்ற வாகனம் கிராண்ட் ஆற்றில் வீழ்ந்தது. இந்நிலையில் 35 வயதுடைய மைக்கேல் ஹான்சன் என்ற பெண்ணின் மூன்று வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதன் பின்னர் குறித்த சிறுவனின் உடலை மீன்பிடியாளர்கள் அந்த வருடம்Read More →

ரொறன்ரோ இளைஞர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா தொடர்பில் மூன்று பொதுக் கல்வி பிரசாரங்களுக்காக 4.1 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் ஜோன் ஓலிவர் நேற்று (புதன்கிழமை) இதனை அறிவித்துள்ளார். மேலும் இதன் போது கஞ்சாவினால் ஏற்படும் ஆரோக்கியமான விளைவுகள் மற்றும் போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்து பற்றி இளைஞர்கள் தெரிந்துகொள்வதற்கு இந்த திட்டம் அவசியமாக அமையும் எனவும்Read More →

கனடாவின் அண்மைய நீதித்துறை நியமன செயல்முறை மாற்றம் குறித்து கனடாவின் முன்னாள் பிரதமர் ஜீன் க்ரேஷியன் கடுமையாக விமர்சித்துள்ளார். கனேடிய ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு காரசாரமாக தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர், கனடாவில் ஒரு மோசமான நீதிபதி இருப்பின், அதற்கு பிரதமரும், நீதியமைச்சருமே பொறுப்பு கூற வேண்டும். கனடாவில் நீதிமன்ற வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக தீர்மானிப்பதற்கென நீதித்துறை ஆலோசனை குழுவொன்றை நியமிக்க ஆளும்Read More →

Kitchener பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் மனைவி உயிரிழந்த நிலையில், அச் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் 6 வாரங்களின் பின்னர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 58 வயதுடைய உடோ ஹான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்தRead More →

அமெரிக்கா ஒரு வெறித்தனமான தலைமையால் வழிநடத்தப்பட்டு வருவதாகவும், நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க பேரரசின் முடிவை குறிப்பதாகவும், கனேடிய முன்னாள் பிரதமர் ஜீன் க்ரேஷியன் விமர்சித்துள்ளார். தனது பத்து வருட கால பிரதமர் பதவி குறித்து அவர் வெளியிடவுள்ள புத்தகம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னாள் பிரதமர் வழங்கிய செவ்வியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ”உலகளாவிய ரீதியில் சுபீட்சத்தை ஏற்படுத்தி ஒரு பாதுகாப்பாளராக செயற்பட்டுவந்த அமெரிக்கா, தற்போது முதல்Read More →

பிரம்டனில் Tomken வீதி மற்றும் Wilkinson வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றில் இருந்த உணவு உற்பத்தி நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு 9.30 அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அங்கே கரும்புகை மூட்டத்துடன் பலத்த தீ எரிந்தவாறு காணப்பட்டதாகவும், ஒரு இடத்தில் என்றில்லாமல் பல இடங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்த வேண்டியிருந்ததாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். தீவிரமாகRead More →

கனமான மூடுபனி காலநிலை தொடர்கின்ற நிலையில், ரொறன்ரோவின் பில்லி பிஷப் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த காலநிலை காரணமாக விமான நிலையத்தில் உள்ள அனைத்து விமானப் பணிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போர்ட்டர் எயார்லைன்ஸ் நேற்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. இருப்பினும் நாளை குறித்த விமான சேவைகள் வழமைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் போர்ட்டர் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காலநிலை இரு நாட்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வாகனRead More →

ரொறன்ரோ நகரசபை தேர்தல் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் தொகுதி குறித்து அண்மையில் சில குழப்பங்கள் நிலவிய போதிலும், முற்கூட்டிய வாக்குப்பதிவுகளை அடுத்த வாரத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளதாக தேர்தலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவிததுள்ளார். ரொறன்ரோ தேர்தல் தொகுதிகளைக் குறைப்பது தொடர்பில் மாகாண நிர்வாகத்திற்கும் ரொறன்ரோ நகர நிர்வாகத்திற்கும் இடையேயான முரன்பாடு நீதிமன்ற விசாரணையில் இருந்தRead More →

காஷ்மீர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குழுவுக்கு நிதி வழங்கியதாக கூறப்படும் இஸ்லாமிய அமைப்பு மீது கனடா அரசாங்கம் தடை விதித்துள்ளது. வட அமெரிக்க – கனடா இஸ்லாமிய கூட்டமைப்பு (ஐஎஸ்என்ஏ கனடா) காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்புடன் தொடர்புடைய குழுவுக்கு நிதி வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஐஎஸ்என்ஏ கனடா அமைப்புக்கு அடுத்து ஓராண்டுக்கு கனடா அரசு தடை விதித்துள்ளதோடு, 5,50,000 டொலர்கள் அபராதமும் விதித்துள்ளது. இதுதொடர்பாகRead More →