ரொமெய்ன் கீரையில் ஏற்பட்ட E. coli பக்டீரியா வெளிப்பாடு காரணமாக மரணம் ஒன்று சம்பவித்துள்ளதாகவும் கனடாவின் ஐந்து மாகாணங்களில் இந்த பக்டீரியா வெளிப்பாடு கண்டிறியப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா பொது சுகாதார நிறுவனம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை மொத்தமாக 30-பேர்கள் வரை E.coli 0157 பக்டீரியாவால் பாதிக்கப்பட்டதாகவும் ஒருவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. மரணம் எங்கு சம்பவித்தது என்பதனையும் மேலதிக விபரங்களையும் அறிக்கை தெரிவிக்கவில்லை. ஒன்ராறியோவில் ஆறு, கியுபெக்கில்Read More →

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த York-Spadina நிலக்கீழ் தொடரூந்து பாதை விரிவாக்கத்திற்கான திறப்பு நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. ரொரன்ரோவின் எல்லைக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள முதலாவது நிலக்கீழ் தொடரூந்து நிலையமான இந்த York-Spadina நிலக்கீழ் தொடரூந்து பாதையின் விரிவாக்க திறப்பு விழாவில், பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு, Vaughan Metropolitan CentreRead More →

ரொறொன்ரோ பெரும்பாகத்தில் கடந்த மாதத்தை விட நவம்பர் மாதத்தில் வீட்டு விலைகள் கிட்டத்தட்ட நான்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வருட இறுதியில் வீடுகள் விற்பனையாவது மந்த கதியிலேயே நகரும் என்ற போதிலும் நடப்பு வருடத்தின் அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் வீடு வாங்குபவர்கள் அனைவரும் காப்பீட்டு அடமானங்களுடன் வீதங்கள் அதிகமாக இருப்பினும் இன்னமும் தங்கள் கடனை செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும்Read More →

ஒன்ராறியோவின் கிழக்கே, Tweed பகுதியில் நேற்று உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். Belleville இலிருந்து வடகிழக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில், நேற்று நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒன்ராறியோ மின்சார வாரியமான ஹைட்ரோ வண் (Hydro One) பணியாளர்கள் சென்ற உலங்குவானூர்தியே விபத்துக்குள்ளானதாகவும், அதன்போது உயிரிழந்த நால்வரும் தமது பணியாளர்களே எனவும் ஹைட்ரோ வண் தெரிவித்துள்ளது. குறித்தRead More →

ஒன்ராறியோ மகாணத்தின் Innisfil நகரில் பாடசாலை அமைந்திருந்த வீதியில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்துக்குப் பதிலாக மணிக்கு 102 கிலோமீற்றர் வேகத்தில் 22 வயதான பெண் ஒருவர் வாகனத்தைச் செலுத்தி காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். உடனடியாகவே சாரதிப்பத்திரமும், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஆபத்தாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கிரிமினல் சட்டத்தில் வழக்கும் பதிவாகியுள்ளது.Read More →

வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் குப்பை தொட்டியில், தவறான குப்பைகளை போடுபவர்களுக்கு 20 டொலர்கள் அபராதம் விதிக்கப்படவுள்ளது. மீள்சுழற்சிப் பயன்பாட்டுக்காக சேகரிக்கப்படும் தொட்டிகளினுள் அதற்குள் போடக்கூடாத ஏனைய குப்பைகளைப் போடுவதால் அதனைப் பிரித்து எடுக்க ரொறன்ரோ நகரசபையினருக்கு பல மில்லியன் டொலர்கள் செலவீனம் ஏற்படுவதாலேயே நகர நிர்வாகம் இந்த முடிவினை எடுத்துள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் சேரும் குப்பைகள், உணவுத் துகள்கள் தனித்தனியான கொள்கலன்களில் வீட்டுக்கு வெளியே வைக்கும் பொழுது நகரசபை ஊழியர்கள்Read More →

லோரியர் கிளப் விடுமுறை வரவேற்பு (Laurier Club Holiday Reception) ஒட்டாவாவில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் (National Gallery of Canada) நேற்று முன்தினம் டிசம்பர் 12, 2017 அன்று மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்தேறியது. இதில் கெளரவ. ஜஸ்ரின் ட்ரூடோ (Hon Justin Trudeau) மற்றும் சோஃபி ட்ரூடோ  (Sophie Trudeau) ஆகியோர் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கனேடியர்களுக்கான உண்மையான மாற்றத்தை வழங்கும் வகையில், லாரியர் கிளப்Read More →

நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) Scarborough Malvern (Toronto, Canada) பகுதியில் யாழ். அளவெட்டி செட்டிச்சோலை வடக்கைப் சேர்ந்த தமிழரான இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஜெயந்தி சீவரட்னம் (46) கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை குறித்த குற்றச்சாட்டில் இவரது கணவரான கதிர்காமநாதன் சுப்பையா (45) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மோர்னிங்சைட் மற்றும் மக்லிவன் அவென்யு (Morningside and McLevin Ave) அருகே 50 Empringham Dr என்ற இடத்தில் ஒரு டவுன்ஹவுஸ் (Town House)Read More →

ரொரன்ரோவின் வட பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் போது, 25 வயது ஆண் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். டஃப்பிரின் வீதி மற்றும் மேஜர் மக்கென்ஸி டிரைவ் வெஸ்ட் பகுதியில் அமைந்துள்ள, றோயல் வங்கிக் கிளையில் நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர், அங்கு ஆயுததாரி ஒருவர்Read More →

நியு யோர்க் ஏலமொன்றில் ஆயிரக்கணக்கான டொலர்களை பெற இருந்த ஓவியம் திருடப்பட்டதென கண்டு பிடிக்கப்பட்டது.  35 வருடங்களிற்கு முன்னர் இந்த ஓவியம் திருடப்பட்டுள்ளது. 19ம்நூற்றாண்டின் எண்ணெய் ஓவியம் ஒன்றை தாங்கள் ஏலத்தில் விட உள்ளதாக தெரிவித்தனர்.  மத்திய ஐரோப்பிய நாடான Czech ஐ சேர்ந்த அன்ரோனியெட்டா பிரென்டெய்ஸ் (ANTONIETTA BRANDEIS, Czechoslovakian, 1849-1910) என்பவரால் வரையப்பட்டது.  இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் துறைமுக நகரத்தின் சித்திரமாகும். ஏலத்தில் 10,000 டொலர்களிற்கு செல்லும்Read More →