கனடாவில் எதிர்வரும் தினங்களில், சில பகுதிகளில் எரிபொருளின் விலை அதிகரிப்பினை காணவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பாகங்களிலும விலை அதிகரிப்பின் அளவு வேறுபட்டுக் காணப்படும் எனவும், அந்த வகையில் ஒன்ராறியோ, மரிட்டைம்ஸ், மனிட்டோபா, சாஸ்காச்சுவான் ஆகிய மாநிலங்களிலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அல்பேர்ட்டா மற்றும் கியூபெக் மாநிலங்களில் அண்மையில் காணப்பட்ட எரிபொருள் உச்ச விலையுடன் ஒப்பிடுகையில், அங்கு எரிபொருள் விலை குறைவடையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Read More →

எதிர்வரும் ஜூன் 07 இல் நடைபெறவுள்ள ஒண்டாரியோ மாகாணத்துக்கான தேர்தலை முன்னிட்டு CCRA News ஏற்பாடு செய்திருந்த ஸ்காபுரோ-ரூஜ்பார்க் (Scarborough-Rouge Park) தொகுதிக்கான அனைத்துக் கட்சிகளுக்குமான (all-candidates meeting) வேட்பாளர்கள் விவாதம் நேற்று திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு St. Dunstan of Canterbury Church இல் நடைபெற்றது. இவ்விவாதத்தில் Liberal கட்சியில் போட்டியிடும் சுமி ஷான், NDP கட்சியில் போட்டியிடும் Felicia Samuel, Green Partyயில் போட்டியிடும் பிரியன் DeRead More →

சீக்கிய பிரிவினைவாத இயக்கங்கள் தொடர்பில் கனடாவில் உள்ள அதன் அனுதாபிகள் வெளியிட்டுவரும் கருத்துகள் குறித்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இடம்பெற்ற பூளோக தவணை மீளாய்வு கூட்டத்தின் போது ஐ.நாவுக்கான இநதியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இநதியா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்Read More →

ஒன்ராறியோவில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து கட்சிகள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. தேர்தலில் முறபோக்கு பழமைவாதக் கட்சி அதிக வாக்குகளை பெற்றுவிட்டால், லிபரல் கட்சியும், புதிய சனநாயக கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்குமா என்று கேள்வி முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த இரண்டு கட்சிகளின் தலைவர்களும் கருத்துக் கூற மறுத்துள்ளனர். அவ்வாறான ஒரு கூட்டு ஆட்சிக்கான சாத்தியப்பாடுகள் குறித்து தற்போதைக்கு தாம்Read More →

ஒன்ராறியோவில் புதிய சனநாயக கட்சிக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகளுக்கான மக்களின் ஆதரவு குறித்து கருத்து கணிப்பொன்று இடம்பெற்றது. இதன் அடிப்படையிலேயே, லிபரல் கட்சியைப் பின்தள்ளி புதிய சனநாயக கட்சி முன்னேறி மக்களின் ஆதரவைப் பெற்ற இரண்டாவது கட்சியாக பெயர்பெற்றுள்ளது. இதில் முற்போக்கு பழமைவாதக் கட்சி முன்னிலையில்Read More →

மனவெளி கலையாற்றுக் குழுவின் 19 வது அரங்காடல் மார்க்கம் தியேட்டர் கலையரங்கில் ஜூன் 30, 2018 சனிக்கிழமை இரண்டு காட்சிகளாக இடம் பெறவுள்ளது.  இந்த அரங்காடலிலே நாடக மேதை என்றிக் இப்சனின் (Henrik Ibsen) உலகப் புகழ்பெற்ற நாடகமான “ஒரு பொம்மையின் வீடு” நாடகம் மூத்த நாடக கலைஞர் P.விக்னேஸ்வரனின் மொழியாக்கத்திலும் நெறியாள்கையிலும் மேடையேறவுள்ளது. இந்த நாடகம் சம்பந்தமான ஊடக நண்பர்களுடனும் மனவெளியின் நலன் விரும்பிகளுடனும் ஒரு அறிமுக கலந்துரையாடல்Read More →

தொழிலாளர் சந்தையில், ஊழியர்களுக்கான ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, கனேடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கனடாவின் தொழிற்சந்தை ஓரளவு சிறந்த மட்டத்தினை தொட்டுள்ள நிலையில், எதிர்வரும் சில காலங்களுக்கு வேலை வாய்ப்புகளில் கணிசமான அதிகரிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அரிது எனவும் கனேடிய மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. மேலும், மாநில அரசின் அந்த நடவடிக்கைக்கும் அப்பால் சம்பளத்தில் கடந்த மாதம் 2.9 சதவீதத்தில் இருந்து 3.1 சதவீதமாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதனையும்Read More →

கனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் 1,100 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் நிலையாகவே உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், கனடாவின் வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் 5.8 சதவீதத்தில் நிலையாகவே உள்ளதாக அந்த அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. எனினும் ஊதியத் தொகையானது சுமார் ஆறு ஆண்டுகள் காணாத உச்சத்தினை கடந்த மாதத்தில் தொட்டுள்ளதாகவும், கடந்த மாதம்Read More →

ஒன்ராறியோவில் புதிய சனநாயக கட்சிக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துளளதாக அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எதிர்வருட் யூன் மாதம் 7ஆம் நாள் நடைபெறவுள்ள ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத் தேல்தல் பரப்புரை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டு மூன்றாவது நாளைத் தொட்டுள்ள நிலையில் இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முன்னிலையில் முற்போக்கு பழமைவாதக் கட்சி உள்ள அதேவேளை, லிபரல் கட்சியைப் பின்தள்ளி புதிய சனநாயக கட்சி முன்னேறி மக்களின்Read More →

கனடாவில் மாகாண தேர்தலில் போது கடதாசி மூலமான வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி வந்த நிலையில், முதன் முறையாக வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தவுள்ளதாக ஒன்ராறியோ தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளதுடன், இந்த முறை காரணமாக வாக்களிப்பதை இலகு படுத்தி வேகமாக்குவதுடன், வாக்கு எண்ணிக்கையும் துரிதப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த முறை வாக்காளர் பதிவு அட்டைகள் இயந்திரங்கங்கள்Read More →