ஒன்றாரியோ – மிசிசாகா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஏகோர்ன் ப்ளேஸ் (Acorn Place) பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் (Feb 03, 2019) இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இருந்துள்ளார். இதன் பின்னர் அவரை உடனடியாகRead More →

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடாவைச் சேர்ந்த இருவரில், ஒருவரை சந்திப்பதற்கு கனடா தூதரக அதிகாரிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் கருதி இது தொடர்பாக மேலதிக தகவல்களை வௌியிட முடியாது என்று சர்வதேச விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் (சனிக்கிழமை) மைக்கல் கொவ்ரிக் என்பவரை சந்தித்த அதிகாரிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் வௌியிடப்படவில்லை. கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 10Read More →

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கனடாவின் – பிரிட்டிஷ் கொலம்பியா, சர்ரே பகுதிக்கு தஞ்சம் கோரி வந்திறங்கிய சிரிய குடும்பம் ஒன்று நாட்டின் குடியுரிமையை பெறுவதற்காக ஆங்கில மொழியை கற்று வருகின்றது. ஃபாட்டொம் இப்ராஹிம் (36 வயது) என்பவரின் தலைமையிலான 7 பேர் கொண்ட குடும்பத்தினர் தமது ஆங்கில மொழியறிவை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று வருடங்களுக்கு முன்னர் பெப்ரவரி மாதமளவில் கனடாவிற்கு வந்திறங்கிய சிரிய குடும்பத்தினர், பிரதமர் ஜஸ்டின்Read More →

கடந்த டிசம்பரில் கொலம்பியாவில் உயிரிழந்த கனேடிய பேராசிரியர் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். முன்னர் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சைமன் ஃபிரேசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றிய 57 வயதான றமாஸான் ஜென்சே என்பவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொலம்பியாவில் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த சமயம், மெடிலின் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இரவு, தனது தங்குவிடுதிக்கு திரும்பாத நிலையில் காணமல்Read More →

கனேடியர் ஒருவர் மெக்சிக்கோவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனேடிய பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவர் மெக்சிக்கோவில் உயிரிழந்தள்ளமை தொடர்பில் தாங்களும் அறிந்துள்ளதாகவும், அவரது குடும்பத்தாருக்கு தேவையான தூதரக உதவிகள் வழங்கப்படுவதாகவும் கனேடிய வெளியுறவுச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. உயிரிழந்த அந்த நபரின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக, கனேய வெளியுறவுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஸ்டெஃபானோ மரோன் தனது அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனினும் தனிநபர் அந்தரங்கத்Read More →

கனடாவின் மத்திய கணக்காளர் நாயகம் மைக்கல் ஃபேர்குசன் தனது 60ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். முன்னர் நியூ பிரவுன்ஸ்விக்கின் கணக்காளர் நாயகமாக கடமையாற்றி வந்த அவர், கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து மத்திய கணக்காளார் நாயகமாக பதவி வகித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இரு்நது புற்றுநோக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், துர்ரதிஸ்டவசமாக சிகிக்சைகள் பலனளிக்காத நிலையில், ஒட்டாவாவில் அவர்களது குடும்பத்தோர் மத்தியில் அவர் உயிரிழந்துRead More →

ஸ்காபரோ உடல்வள நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல், 38 மணிநேர பலத்த தொடர் போராட்டங்களின் பின்னர் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஷெப்பேர்ட் அவனியூ மற்றும் மிட்லான்ட் அவனியூ பகுதியில் அமைந்துள்ள “Agincourt Recreation Centre” இல் வியாழக்கிழமை மாலை 4.4 மணியளவில் இந்த தீப்பரவல் ஆரம்பமானதை அடுத்து, அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும், இரவு 7.30 அளவில் தீப்பரவல் மேலும் தீவிரமடைந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில்Read More →

அல்பர்ட்டாவில் கடந்த 2017ஆம் ஆண்டை விட 2018ஆம் ஆண்டு ஃபென்டானில் (fentanyl) அளவுக்கதிமாக உபயோகித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அல்பர்ட்டா சுகாதார அமைப்பின், ஓபியோட் ரெஸ்யூஸ் சர்வீலன்ஸ் காலாண்டு அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த அறிக்கையின் படி, 2018ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரையிலான தரவுகளின் படி, 582 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2017ஆம் ஆண்டு 165Read More →

நெடுஞ்சாலை 401இன் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில், நோர்த் யோர்க் பகுதியில், கனரக வாகனம் ஒன்று மோதியதில் ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. Yonge Street exit பகுதியில், பிற்பகல் 2.15 மணியளவில் குறித்த இந்த விபத்து சம்பவித்துள்ளதனையும், மோதுண்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதனையும் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் (OPP) உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த அந்த நபர் தனது வாகனத்தில் இருந்து வெளியே வந்திருந்தRead More →

ஸ்காபரோவில் பாரிய தீப் பரவல் இடம்பெற்ற Agincourt பொழுதுபோக்கு மையத்தை, ரொறன்ரோ நகர பிதா ஜோன் ரொறி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது அவர், அங்கு இடம்பெற்ற அசாம்பாவிதங்கள் குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் விசாரணை அதிகாரிகளிடம் கேட்டறிந்துக்கொண்டார். கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 அளவில் தண்ணீர் தடாகத்தின் மேற்புற கூரையில் பரவத் தொடங்கிய தீ, பின்னர் பெருமளவான பகுதியை தாக்கியது. அப்பகுதி கட்டுப்படுத்தமுடியாத பெரும் புகை மண்டலம் காணப்பட்டதால்,Read More →