கனடாவின் ஹலிஃபக்ஸ் மாநகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கான அஞ்சலி நிகழ்வில்  பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கலந்துக் கொண்டார். ஹலிஃபக்ஸ் பிரதான சதுக்கத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு குறித்த அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. தீ விபத்தில் தமது ஏழு குழந்தைகளை இழந்த உறவுகளுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் நேற்றைய அஞ்சலி நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் கலந்துக் கொண்டனர். ஹலிஃபக்ஸ் மாநகரின் வீடொன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்றRead More →

ஒன்ராறியோவின் Barrie பகுதியில் பதின்ம வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன் ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது முதல்தர கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த சிறுவனும், கைது செய்யப்பட்ட சிறுவனும் ஒரே வீட்டில் வசித்து வந்த போதிலும், இருவரும் உறவினர்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த அந்தச் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், உயிரிழந்தவர்Read More →

வங்கிப் பண இயந்திர முனையங்கள், துரித உணவகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வைத்து பெண்களிடம் துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் கொள்ளையிட்டதாக 20 வயது ரொரன்ரோ ஆண் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது 25 வெவ்வேறு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த மாதம் முதலாம் திகதிக்கும் கடந்த திங்கட்கிழமைக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், வங்கி பண வினியோக இயந்திரம் அமைந்துள்ள பகுதியில் வைத்து கத்தி முனையில் தம்மை மிரட்டி கொள்ளையிடப்பட்டதாகRead More →

இந்திய வம்சாவளி சிறுமி ரியா ராஜ்குமார் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்தை ரூபேஷ் ராஜ்குமார் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தனது தாயுடன் வாழ்ந்து வந்த ரியா ராஜ்குமார் (11) என்ற இந்திய வம்சாவளி சிறுமி தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தந்தையை சந்திக்கச் சென்ற நிலையில், வெகு நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அவரது தாயார் பொலிஸாருக்கு தகவல் வழங்கி, குறித்த தகவலுக்கமைய நடவடிக்கைகளைRead More →

அல்பேர்ட்டா மாகாண அரசாங்கத்தினால் ஆறு புதிய மாகாண நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை இலகுபடுத்தும் நோக்கிலேயே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கனேடிய நீதியமைச்சர் Kathleen Ganley தெரிவித்துள்ளார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் நான்கு பெண் நீதிபதிகளும், இரண்டு ஆண் நீதிபதிகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கயை Gregory Stirling, Susan Pepper மற்றும் Gay Binns ஆகியோர் கல்கரி நீதிமன்றத்திலும், ஏனையவர்கள் எட்மன்டன் உள்ளிட்ட மாகாண நீதிமன்றங்களில் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,Read More →

கியூபெக்கில் ஏற்பட்ட தீ பரவலில் அதிகளவான மலர்கள் எரிந்து நாசமாகியுள்ளனன. வெளிநாடுகளுக்கு மலர்களை ஏற்றுமதி செய்யும் நிலையம் ஒன்றிலேயே இன்று(புதன்கிழமை) காலை இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். தீ பரவல் ஏற்பட்டமைக்கான காரணமாக இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. குறித்த தீRead More →

கொதித்தாறிய நீரை பருகுமாறு மொன்றியல் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மொன்றியல் சுகாதார திணைக்களத்தினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொன்றியலின் பல பகுதிகளிலும் நீரில் பக்டீரியா தாக்கம் அதிகரித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை அடுத்தே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Lalande, Kirouac, Jean-Paul-Vincent and Claude streets, highways 20 and 132 உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களிடமே இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், சிறுவர்களுக்கான உணவுகளைRead More →

கனடாவில் தந்தையினால் படுகொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை கனடாவின் பிரம்ப்டன் ஹுன்டொனாரியோ ஸ்ட்ரீட் மற்றும் டெர்ரி வீதி பகுதி ஊடாக ரூபேஷ் ராஜ்குமார் தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார். அன்று மாலை சிறுமி மீண்டும் வீடு திரும்பாத நிலையில் தாய் தனது மகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். பொலிஸார் மேற்கொண்ட உடனடி தேடுதல் நடவடிக்கையின்போது உயிரிழந்தநிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனிடையே, சிறுமியின்Read More →

Payless காலணி விற்பனை நிறுவனம் வட அமெரிக்காவிலுள்ள தனது 2500 விற்பனை நிலையங்களையும் வரும் இலைதுளிர் காலத்துடன் மூடவுள்ளதாக, Payless காலணி விற்பனை நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம், கனடாவிலும் அந்நிறுவனத்தின் 248 கிளைகள் மூடப்படுவதுடன், 2400க்கும் மேலானோர் வேலைகளை இழக்கவுள்ளனர். Payless நிறுவனத்தின் முன்னைய மீள் ஓழுங்கமைப்புக்கள், தற்கால வர்த்தக சூழலுக்கு பொருத்தமற்றதாக அதனை மாற்றிவிட்டதாக, அந்நிறுவனத்தின் தற்போதைய மீளமைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். எனினும் வளர்ந்துவரும் ஒன்லைன் வர்த்தகச்சந்தை பெருமளவிலானRead More →

ஒண்டாரியோவின் காவல்துறை சேவைகள் சட்டத்தில், மாற்றங்களை ஏற்படுத்தப்போவதாக, மாகாண முற்போக்கு பழமைவாத கட்சி அரசு அறிவித்துள்ளது. புதிய பரந்துபட்ட காவல்துறை சேவைகள் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், அது, விசேட விசாரணைப்பிரிவான SIUஇன் செயற்பாடுகளை நெறிமுறைப்படுத்துவதோடு, வலுப்படுத்தவும் செய்யுமென, ஒண்டாரியோ சட்டமா அதிபர் கரோலின் மல்ரோனி தெரிவித்துள்ளார். தற்போதைய காவல்துறை சேவைகள் சட்டத்தின்படி, SIU, தேவையற்ற விடயங்களில் கவனம் செலுத்தி, காவல்துறையினரையும் பொதுமக்களையும் இருட்டில் தள்ளுவதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், உயிர்காக்க உதவியRead More →