வடக்கு எட்மன்டன் பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்!

வடக்கு எட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.


கனடாவின் வடக்கு எட்மண்டன் பகுதியில் 93 தெரு மற்றும் 137 அவென்யூவில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.