கனடாவில் விபத்து – நால்வர் படுகாயம்!

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கனடாவின் Mississauga பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.