இரண்டு சிறுவர்களுடன் மாயமான வயோதிபர் பத்திரமாக மீட்பு!

கனடாவில் இரண்டு சிறுவர்களுடன் மாயமான முதியவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


70 வயதான லியோ ஈஸ்டன் என்ற முதியவர் தனது இரண்டு பேரக்குழந்தைகளுடன் கடந்த புதன்கிழமை முதல் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர்களை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த மூவரும் இன்று(வெள்ளிக்கிழமை) காலை ரொறன்ரோவிலுள்ள வீடு ஒன்றிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த மூவரும் தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இரண்டு சிறுவர்களுடன் மாயமான முதியவரை கண்டுபிடிக்க உதவி செய்த பொதுமக்களுக்கு பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.