இந்தோனேசியாவில் சிறைவாசம் அனுபவித்த கனேடியர் நாடு திரும்பினார்

சிறுவர் பாலியல் முறைகேட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தோனேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனேடிய ஆசிரியரான நெய்ல் பன்டில்மன் என்பவர், கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது நாடு திரும்பியுள்ளார்.


இந்தோனேசியாவில் முன்னர் ஆசிரியாராக கடமையாற்றிவந்த அவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பத்து ஆண்டு காலத்திற்கும் அதிகமான அவர் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலையில், அண்மையில் அந்த நாட்டு அரசாங்கம் அவரை கருணை அடிப்படையில் விடுவித்துள்ளதாக, அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளின் முன்னர், தான் ஒருபோதும் புரிந்திராத குற்றச் செயல் ஒன்றுக்காக, தப்பாக தன்மீது குற்றஞ்சாட்டப்பட்டு, இந்த தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அதனை முன்னிறுத்தி தன்னால் முன்வைக்கப்பட்ட கருணை மனு அடிப்படையில் கடந்த மாதம் தான் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் அதில் குறிப்பிட்டு்ளளார்.

இவரது விடுதலை தொடர்பி்ல கனேடிய வெளியுறவுத் துறை இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை என்ற போதிலும், தான் மீண்டும் நாடு திரும்ப உதவிய கனேடிய அரசாங்கத்திற்கு அவர் தனது நன்றிகளை இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.