முன்னாள் பிரதமர் மருத்துவமனையில்

ஹொங்கொங்கில் இடம்பெறும் வர்த்தக மாநாடு ஒன்றில் பங்குபற்றுவதற்காகச் சென்றிருந்த கனடாவின் முன்னாள் பிரதமர் Jean Chretien, உடல்நலக்கோளாறு காரணமாக அங்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அங்கு இடம்பெறும் அமெரிக்க – சீன வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்று சேர்ந்த அவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக, ஹொங்கொங்கின் முன்னாள் தலைவர் துங் சீ ஹுவா தெரிவித்துள்ளார்.

தாம் இருவரும் நேற்று காலை ஒன்றாக காலை உணவினை அருந்துவதாக திட்டமிட்டிருந்ததாகவும், எனினும் அவருக்கு திடீரென உடல்நலம் ஒத்துளைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள துங் சீ, அவருக்கு உடல்நலம் சீரடைந்துவிடும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

லிபரல் கட்சியின் முன்னாள் பிரதமரான Jean Chretien, கடந்த 1993ஆம் ஆண்டிலிருந்து 2003ஆம் ஆண்டு வரையில் கனடாவின் பிரதமராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.