தகுதிவாய்ந்த உலகளாவிய திறன்சார் பிரவாகப் பட்டியலை கனடா புதுப்பித்துள்ளது!

கனடா அரசாங்கம் அதன் பிரபலமான சர்வதேச திறன் சார்ந்த நீரோட்டத்தின் கீழ் தகுதியுள்ள தொழில்களின் பட்டியலை புதுப்பித்துள்ளது.


இதன்படி, கணினி வலையமைப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர், பொறியியல் மேலாளர்கள், கட்டிடக்கலை மற்றும் அறிவியல் மேலாளர்கள் அதிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

கனடா தொழில்வாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பு (ESDC), உலகளாவிய திறன்சார் நீரோட்டத்திற்கான விண்ணப்பங்களை செயலாக்குவதற்கு பொறுப்பான மத்திய அமைப்பாக செயற்பட்டு வருகின்றது.

இதன்படி “கனேடிய தொழிலாளர் சந்தை மற்றும் புத்தாக்க நிறுவனங்களின் தேவைகளை தொடர்ந்து பிரதிபலிப்பதை உறுதி செய்வதற்கு இந்த புதுப்பித்தல் நடவடிக்கைகள் அவசியம்” என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.