ஹமில்ட்டனில் இளைஞர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி

ஹமில்ட்டன் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


ந்ள்ளிரவுக்குச் சற்று முன்பாக Carling Streetஇல் குறித்த அந்த இளைஞர் காயங்களுடன் காணப்பட்டதாக சம்பவ இடத்திலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் காணப்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாரிய குற்றச் செயல்கள் குறித்த சிறப்பு விசாரணைப் பிரிவினர் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஹமில்ட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.