ரொரன்ரோ மேற்கில் மூவர் மீது துப்பாக்கிச் சூடு

இன்று காலை வேளையில் ரொரன்ரோவின் மேற்கே, Queen West குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Queen Street West மற்றும் Ossington Avenue பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக இன்று அதிகாலை 2.30 அளவில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், அங்கே மூன்றுபேர் சிறிது தூர இடைவெளிகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், மூவரும் உடனடியாகவே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், அங்கே என்ன நடந்தது என்பதனைக் கண்டறிவதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாகவும், அங்கே பல்வேறு இடங்களிலும் காண்காணிப்பு ஒளிப்பதிவு கருவிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றிலிருந்து காத்திரமான அதாரங்களைத் திரட்ட முடியும் என்றும், அதனை விடவும் அந்த வீதியில் அப்போது பலரும் இருந்திருக்கக்கூடும் என்பதனால், சம்பவத்தை நேரில் பார்த்தோரிடம் உரையாட விரும்புவதாகவும் ரொரன்ரோ காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.