மிசிசாகாவில் வீட்டினுள் பாய்ந்த கார்

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் ஒன்று,வீதியை விட்டு விலகிச் சென்று வீடு ஒன்றின் சுவரை உடைத்துக்கொண்டு உள்நுளைந்த சம்பவம் ஒன்று நேற்று இரவு மிசிசாகாவில் இடம்பெற்றுள்ளது.


Tenth Line மற்றும் Rosie Ridge Crescent பகுதியில் அமைந்துள்ள விடு ஒன்றில் நேற்று இரவு எட்டு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை பீல் பிராந்திய காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, அங்கே கறுப்பு நிற Lexus sedan ரக வாகனம் ஒன்று விட்டின் சுவரை உடைத்து உள்நுளைந்து பக்கவாட்டில் சரிந்தவாறு, பாதிப் பாகம் வெளியே தொங்கிக்கொண்டிருந்த நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வாகனத்திச் சாரதி வாகனத்தினுள் சிக்குண்டந நிலையில் காணப்பட்டதாகவும், மீட்புப் படையினர் அவரை வாகனத்தினுள் இருந்து வெளியே கொண்டுவந்த நிலையில், பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிஸ்டவசமாக அந்த வீட்டினுள் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ரொரன்ரொ பெரும்பாகத்தில் இவ்வாறு வீட்டின் மீது வாகனம் மோதுண்ட இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.