காட்டுத்தீ: இரண்டாம் முறையாகவும் மக்கள் இடம்பெயர்வு

காட்டுத்தீ மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள புகைமூட்டம் காரணமாக, ஒன்ராறியோவின் வடமேற்கே அமைந்துள்ள Pikangikum பழங்குடியின மக்கள் குடியிருப்பில் உள்ளோர் அனைவரும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.


ஒரு மாத காலத்தினுள் அவர்கள் இவ்வாறு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெளியேற்ற நடவடிக்கைக்கு உதவும் வகையில், இதனால் அதிகம் பாதிப்பினை எதிர்நோக்கக்கூடிய வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அவர்களுடைய குடும்பத்தாருடன் சேர்த்து ஆகாய மார்க்கமாக வெளியேற்றப்படுகின்றனர். அதற்கான பணிகளில் இரண்டு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் விமான நிலையத்தில் இருந்து அவை மக்களை ஏற்றிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாகவும் கடந்த மே மாத இறுதியிலிருந்து யூன் மாத ஆரம்பப் பகுதி வரையிலும் அங்கிருந்து இவ்வாறு இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் விடுகளை விட்டு வெளியேறி ஒரு சில வாரங்களுக்கு முன்னரே வீடு திரும்பிய நிலையில், மீண்டும் அவர்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.