இன்று காலை மிசிசாகாவில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

இன்று காலை வேளையில் மிசிசாகாவில் அமைந்துள்ள மதுபாண விடுதி ஒன்றில் வைத்து பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


Torbram வீதியில் அமைந்துள்ள மதுபாண விடுதி ஒன்றில் இன்று அதிகாலை 2.50 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்தப் பெண்ணின் உடலில் குறைந்தது ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயம் காணப்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ள போதிலும், சந்தேக நபர் குறித்த விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் நிச்சயமாக அங்கே பலரும் இருந்திருக்கக்கூடும் எனவும், சந்தேக நபரை இனங்காண அவர்கள் உதவக்கூடும் என்பதானால், அந்த நேரத்தில் அங்கிருந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் விசாரணை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.