ரொரன்ரோ ஹில்ட்டன் துப்பாக்கிச் சூடு: இருவர் தேடப்படுகின்றனர்

ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் உள்ள பயணிகள் தங்கும் விடுதி ஒன்றின் வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் குறைந்தது இருவரைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


University Avenue மற்றும் Richmond Street West பகுதியில் அமைந்துள்ள ஹில்ட்டன் விருந்தினர் விடுதிக்கு வெளியே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், அங்கே துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாகவும், சம்பவம் தொடர்பில் குறைந்தது இருவர் தேடப்படுவதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த அடையாளங்கள், விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும், சம்பவ இடத்திலிருந்து கறுப்பு நிற வாகனம் ஒன்று வேகமாக புறப்பட்டுச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தினை அடுத்து அந்தப் பகுதிடைத் தடை செய்து விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள், இது குறித்து மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.