தமிழர்கள் உட்பட 6 பேர் திருட்டு மற்றும் ஆயுத குற்றச்சாட்டுகளில் கைது!

மடிக்கணினி திருடியது மற்றும் துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பாக இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேரை டொராண்டோ போலீசார் கைது செய்துள்ளனர்.


குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Queen street west) மற்றும் ஒசிங்ன்டன் அவென்யூ (Ossignton Ave) பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

23 வயதான ஒரு பெண் தனது மடிக்கணினியை விற்க Kijiji யில் ஒரு விளம்பரத்தை செய்திருந்தார். அதனை வாங்குவதற்கு தன்னை தொடர்பு கொண்ட ஒரு ஆணை சந்திக்க குறிப்பிட்ட இடத்திற்கு வர ஒழுங்கு செய்திருந்தார்.

ஒப்புக்கொண்ட இடத்திற்கு இரண்டு ஆண்கள் வந்து, அந்த பெண்ணிடமிருந்து மடிக்கணினியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தப்பி ஓடும்போது, ஆண் ஒருவரின் இடுப்பில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி விழுந்தது. பின்னர் அவர்கள் திருடப்பட்ட ஒரு வெள்ளி நிற ஹொண்டா சிவிக் (Silver Honda Civic) கார் ஒன்றில் தப்பியோடியுள்ளனர்.

அடுத்த நாள் வந்தவர்களில் ஒருவரான ஆண் திருடப்பட்ட பெண்ணின் மடிக்கணினியை ஆன்லைனில் விற்க முயன்றுள்ளார். அதிகாரிகள் அவருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து பின்னர் கைது செய்தனர்.

L-R: (Tajean Alexander-Smith), (Matchushan Kamalakumaran), (Mohsen Yahya) and (Laxsen Laxmikanthan)

கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர் மடிக்கணினி, ஒரு பெரிய வேட்டை கத்தி (large hunting knife), கிரெடிட் கார்ட் போன்ற கத்தி (credit card-style knife) மற்றும் மினி க்ளோக் ஏர் கைத்துப்பாக்கி (mini Glock air soft pistol ) ஆகியவற்றை வைத்திருந்தார்.

அதன்பிறகு, மேலும் பல சிறுவர்கள் மற்றும் ஆண்கள் இது தொடர்பில் கைது செய்யப்பட்டதாகவும், திருடப்பட்ட வாகனம் கைப்பற்றபட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

திருடப்பட்ட மடிக்கணினியை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 2 சிறுவர்கள், 4 ஆண்களாக டொராண்டோவைச் சேர்ந்த தாஜியன் அலெக்சாண்டர்-ஸ்மித் (Tajean Alexander-Smith), மட்சுஷன் கமலகுமரன் (Matchushan Kamalakumaran) மற்றும் மொஹ்சென் யஹ்யா (Mohsen Yahya), லக்ஷ்சன் லக்ஷ்மிகாந்தன் (Laxsen Laxmikanthan) ஆகியோரை பொலிசார் அடையாளம் கண்டு கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் ஜூலை 31 ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.