மிசிசாகாவில் வாகனத்துடன் கட்டிடம் தீக்கிரை

நேற்று முற்பகல் வேளையில் மிசிசாகாவில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்த்தில் கட்டிடம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.


Derry Road West மற்றும் Creditview வீதிப் பகுதியில் நேற்று முற்பகல் 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த அந்த ஈரடுக்கு குடியிருப்பு கட்டிடம் மட்டுமின்றி, அதன் முகப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூர்தி ஒன்றும் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

குறித்த அந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் எவரும் வதிவதில்லை எனவும், மற்றைய பகுதியில் வயதான பெண் ஒருவர் உட்பட 3 பேர் வாழ்ந்து வந்ததாகவும் தீக்கிரையான வீட்டுக்கு அருகே வசிப்போர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவிலலை. தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.