ஸ்காபரோவில் கத்திக் குத்து – ஒருவர் உயிராபத்தான நிலையில்

நேற்று அதிகாலை ஸ்காபரோ விலேஜில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த 26 வயது ஆண் ஒருவர், உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Kingston வீதி மற்றும் Scarborough Golf Club வீதிப் பகுதியில், நேற்று அதிகாலை 3.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கத்திக் குத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், ஒருவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

எனினும் இந்த கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.