டவுன்ரவுன் கத்திக் குத்து: ஒருவர் தேடப்படுகிறார்

ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Bloor street மற்றும் Sherbourne street பகுதியில், பு்தன்கிழமை இரவு 8.20 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அடி வயிற்றுப் பகுதியில் கத்திக் குத்துக் காயங்களுக்கு உள்ளான குறித்த அந்த ஆண், பாரதூரமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதனை ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகள், சுமார் ஐந்து அடி ஆறு அங்குல உயரமுள்ள, மெல்லிய உடல்வாகு கொண்ட 25 வயது ஆண் ஒருவரைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.