சீனாவில் 56 ஆயிரம் அரங்குகளில் ரஜினியின் 2.0 வெளியீடு: லைகா நிறுவனம் அறிவிப்பு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்தப் படம் 2.0.


இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி இந்தப் படம் வெளியானது.

இந்தப் படத்தை சீனாவில் வெளியிடும் வேலைகளில் லைகா நிறுவனம் இறங்கியது. இப்போது வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, “வரும் ஜூலை 12ஆம் தேதி சீனா முழுவதும் 56000 அரங்குகளில் 2.0 படம் வெளியாகவிருக்கிறது.

இத்தனை அரங்குகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் 2.0தான் என்பது குறிப்பிடத்தக்கது” என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.