ஆசிரியர்களினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் மாணவிகள் – அதிர்ச்சி தகவல்!

கனடாவில் ஆசிரியர்களினால் மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றமை குறித்து விசாரணை செய்யும் தேசிய தொண்டு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 17 மாதங்களில் மாத்திரம் உறுதி செய்யப்பட்ட அல்லது நடந்ததாக சந்தேகிக்கப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 108 பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 1997ஆம் ஆண்டிற்கும் 2017ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கனடாவில், பாடசாலை ஊழியர்கள் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சுமார் 1,300 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதுகுறித்த விசாரணைகள் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.