கனடா மொன்றியால் சர்வதேச திரைப்பட விழா: ‘சூப்பர் டீலக்ஸ்’ திரையிட தேர்வு!

‘சூப்பர் டீலக்ஸ்’ படம், கனடாவில் உள்ள மொன்றியால் நகரில் நடைபெற உள்ள சர்வதேச பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இதற்காக பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப், சூப்பர் டீலக்ஸ் படக்குழுவினருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின் ஆகியோர் நடித்த படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது. இதில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் வந்தார். இந்த படம் விரைவில் இந்தியில் மறு உருவாக்கம் ஆக உள்ளது. இந்தி படத்தையும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்குகிறார். இதற்கான நடிகர் – நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

இந்நிலையில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம், கனடாவில் உள்ள மொன்றியால் நகரில் நடைபெற உள்ள சர்வதேச பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இதற்காக பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப், சூப்பர் டீலக்ஸ் படக்குழுவினருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.