ரொரன்ரோ மேற்கில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் மருத்துவமனையில்

ரொரன்ரோவின் மேற்கு பகுதியில் நேற்று இரவு வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Emmett Avenue மற்றும் Jane Street பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தின்போது ஒரு ஆண் உயிராபத்தற்ற காயங்களுக்கு உள்ளானதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து ஒரு தொகுதி ஆண்கள் வாகனம் ஒன்றிலர் தப்பிச் சென்றதாக கூறப்படுகின்ற போதிலும், சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

வியாழக்கிழமை இரவு ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் தானாகவே மருத்துவமனைக்கு சென்று சேர்ந்துள்ள நிலையில், அந்தச் சம்பவத்துடன், நேற்று இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்திற்கு தொடர்பு இருக்கக்கூடுமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.