மிசிசாகாவில் வாகன விபத்து: 4 வயது சிறுமி படுகாயம்

நெடுஞ்சாலை 401, மிசிசாகா பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயதுச் சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Winston Churchill Boulevard பகுதியில் நெடுஞ்சாலை 401இன் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சிறிய SUV ரக வாகனம் ஒன்றும் சரக்கு ஊர்தி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்த நிலையில், இதன்போது பெண் ஒருவரும், 2 மற்றும் 4 வயதினை உடைய இரண்டு சிறுவர்களும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து நேர்ந்தபோது குறித்த அந்த நான்கு வயதுச் சிறுமி வாகனத்திலிருந்து வெளியே வீசப்பட்டதாகவும், பலத்த காயங்களுடன் காணப்பட்ட அவர் உயிராபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஏனைய இருவரும் வாகனத்தினுள் சிக்குண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், அவர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.