இந்திய பிரதமராக மீண்டும் பதவியேற்கும் மோடிக்கு கனடா பிரதமர் வாழ்த்து!

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றுள்ளதை அடுத்து மீண்டும் இந்திய பிரதமராகவுள்ள நரேந்திர மோடிக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய பிரதமர் மோடி 2-முறையாக ஆட்சி அமைக்க உள்ளார்.

வெற்றி பெற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் சிறிசேனா உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-வும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில், “மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா அரசின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கனடா – இந்தியர்களின் வாழ்க்கை மேம்பாடு, கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீடு, சூழலியல் மாற்றம் போன்ற துறைகளில் அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.