விஜய் ஸ்டைலில் படம் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

Sk 16 படத்தின் கதை முழுக்க முழுக்க அண்ணன் தங்கை செண்டிமெண்டை மையப்படுத்தியதாம்.


இன்னும் சொல்லப்போனால் விஜய்யின் திருப்பாச்சி பாணியில் இப்படம் இருக்குமாம். தமிழ் சினிமாவில குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகனா உருவெடுத்தவரு சிவகார்த்திகேயன்.

வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு.

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க. இப்படத்தின் கதை முழுக்க முழுக்க அண்ணன் தங்கை செண்டிமெண்டை மையப்படுத்தியதாம்.

இன்னும் சொல்லப்போனால் விஜய்யின் திருப்பாச்சி பாணியில் இப்படம் இருக்குமாம். மிஸ்டர் லோக்கலில் மன்னன் பாணியில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது விஜய் பாணிக்கு திரும்பியுள்ளார்.

இப்படத்தில் போக யோகி பாபு, சூரின்னு ரெண்டு காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில இணைஞ்சிருக்காங்க. மேலும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.