த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்!

ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் த்ரிஷாவை போலீஸ் கைது செய்வது போல காட்சி அமைந்துள்ளது.


ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது.

ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வருகிறார் த்ரிஷா.

96 வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிறார்.

இப்படத்திற்கு ராங்கி என பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு பாலைவன பகுதிகளில் நடைபெறுகிறதாம்.

இதற்காக படக்குழு விரைவில் வெளிநாடு சென்று லொகேஷன் வேட்டையில் இறங்கவுள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் த்ரிஷாவை போலீஸ் கைது செய்வது போல காட்சி அமைந்துள்ளது.