யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி!

தளபதி 63 படத்தில் சர்காரை தொடர்ந்து நடிகர் யோகி பாபு மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார்.


அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதில் சர்காரை தொடர்ந்து நடிகர் யோகி பாபு மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு இடைவெளியில் யோகி பாபு தான் ஹீரோவாக நடிக்கும் தர்மபிரபு படத்தின் டிரைலரை விஜய்க்கு போட்டுக் காட்டினாராம். அதை பார்த்த விஜய் விழுந்து விழுந்து சிரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தின் படப்பிடிப்பு ஈ.சி.ஆரில் இருந்தே உள்ளே வந்து தற்போது சிட்டிக்குள் நடைபெற்று வருகிறதாம்.

மேலும் சில கல்லூரிகளிலும் இப்படத்தின் மாண்டேஜ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.