பாகுபலிக்கு பிறகு இன்டஸ்ட்ரி ஹிட் விஸ்வாசம் தான்! பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி

அஜித்தின் நடிப்பில் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகியிருந்த படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்து பணிப்புரிந்த இப்படம் கிராமத்து கதையை உள்ளடக்கியதாக இருந்தது.


மேலும் கிளைமேக்ஸில் மிகுந்த தந்தை- மகள் பாசத்தை வெளிப்படுத்தியதால் போட்டிக்கு ரஜினியின் பேட்ட படம் வெளியாகியிருந்தாலும் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய பிரபல திரையரங்கான ரோகினி திரையரங்கின் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா, பாகுபலி படத்திற்கு பிறகு அதிக ஷேர் விஸ்வாசம் படத்திற்கு தான் நடந்தது. so definitely it will be classified as an industry hit என கூறினார்.