சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்? வைரலாகும் செய்தி!

ஒரு அடார் லவ் படத்தில் தன்னுடன் நடித்த சக நடிகர் ரோஷனை இவர் காதலித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி வைரலானது. ஆனால் அதை இவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


ஒரே நைட்டில் ஒபாமா ஆகணும் என வடிவேலு ஒரு படத்தில் காமெடியாக தான் பேசியிருப்பார். ஆனால் மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின் வாழ்க்கையில் அது நடந்தது.

இவர் நடித்த ஒரு அடார் லவ் படத்தின் பாடல் வெளியாகி அதில் இவர் கண்ணடிக்கும் வீடியோ பெரும் புகழை பெற்றது. ஆனால் அந்த படம் சரியாக ஓடாததால் போன வேகத்திலேயே கீழே சரிந்தார்.

அவருடைய கேரியரே இனி அவ்வளவுதான் என நினைத்த நேரத்தில் தற்போது அவர் அதிரடியாக புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

பாலிவுட்டில் லவ் ஹேக்கர்ஸ் எனும் காதல் படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் நடிக்கிறாராம். இது இவருக்கு கண்டிப்பாக ஒரு கம்பேக் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இது ஒருபக்கம் இருக்க ஒரு அடார் லவ் படத்தில் தன்னுடன் நடித்த சக நடிகர் ரோஷனை இவர் காதலித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி வைரலானது. ஆனால் அதை இவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.