எர்ரி ஏரி- சென். கிளயார் ஏரிகளின் நீர் மட்டம் சாதனை அளவாக உயர்வு

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால், எர்ரி ஏரி மற்றும் சென். கிளயார் ஏரிகளின் நீர் மட்டம் சாதனை அளவாக உயர்ந்துள்ளது.


இதற்கமைய, கடந்த மாதம் சென். கிளயார் ஏரியின் நீர் மட்டம், 23 சென்ரீ மீற்றர் வரை உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்தை விட 15 சென்ரீ மீற்றர் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, எர்ரி ஏரி நீர் மட்டம், 25 சென்ரீ மீற்றர் வரை உயர்ந்துள்ளது. இதுவும் கடந்த ஆண்டு மே மாதத்தை விட 15 சென்ரீ மீற்றர் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோவர் தேம்ஸ் பள்ளத்தாக்கு பாதுகாப்பு ஆணையம், விக்டோரியா தினம் வரை அதாவது மே மாதம் 20ஆம் திகதி வரை நிலச்சரிவு நிலைமைகளுக்கு பாதுகாப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.