கனேடியர்கள் கைதுசெய்யப்பட்டமையை சில மாதங்களின் பின்னர் உறுதிப்படுத்தியது சீனா!

கனேடியர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமையை சீனா தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.


தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இருவரும் சில மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

அரசாங்க  ரகசியங்களைத் திருடிய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜதந்திரி மைக்கல் கோவ்ரிக், வர்த்தகர் மைக்கல் ஸ்பாவொர் – ஆகிய இருவரையும் சீன அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமான குவாவியின் (Huawei) தலைமை நிதி நிர்வாகி கடந்த ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி கனடாவில் கைது செய்யப்பட்டார்.

அதற்குப் பதிலடியாகச் சீனா, கனடியர்கள் இருவரையும் கைது செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த கனேடியர்கள் கைதுசெய்யப்பட்டு சில மாதங்கள் கடந்துள்ள நிலையிலேயே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையை சீனா ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.