ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் அரசியலிலிருந்து விலகத் தீர்மானம்

இவ்வருட இறுதியுடன் பதவி விலகுவதாக ஒன்ராறியோ சட்டமன்றத்தின் லிபரல் கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஒன்ராறியோவின் கூட்டாட்சி தேர்தல் மாவட்டமான ஒட்டாவா வானியரின் மாகாண பிரதிநிதியாக செயற்பட்டுவந்த நதாலி டெஸ் ரோசியர்ஸ் இவ்வாறு பதவி விலகல் குறித்து அறிவித்துள்ளார்.

கல்விசார் பதவியொன்றுக்கு நியமிக்கப்படவுள்ள நிலையிலேயே அரசியல் பதவியை துறக்க அவர் தீர்மானித்துள்ளார்.

அவர் ரொறன்ரோ கல்லூரியொன்றின் அதிபராக அடுத்த ஆண்டு பதவியேற்கவுள்ளார்.

ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் முன்பு பணியாற்றியிருந்த டெஸ் ரோசியர்ஸ், 2016ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.