முன்னணி நடிகரை மணக்கும் டாப்ஸீ – யார் அந்த ஹீரோ தெரியுமா?

முன்னணி நடிகர் ஒருவரின் பெயரை சொல்லி அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக டாப்ஸீ நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.


தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் டாப்ஸீ.

அதன் பின்னர் அஜித்தின் ஆரம்பம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். பாலிவுட் பக்கம் தாவிய அம்மணிக்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் யாரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என கேட்டதற்கு விக்கி கௌஷல் என குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்த படத்தின் இறுதி படப்பிடிப்பு முடிந்து பார்ட்டியில் டாப்ஸீ குடித்து விட்டு ரகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.